PBKS vs GT Live Score:கடைசி 2 பந்தில் 2 சிக்ஸ்..! பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் திரில் வெற்றி..! ராகுல் திவாட்டியா அபாரம்..!

IPL 2022, Match, PBKS vs GT: பஞ்சாப் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே விரிவாக காணலாம்.

ABP NADU Last Updated: 08 Apr 2022 11:31 PM
கடைசி 2 பந்தில் 2 சிக்ஸ்..! பரபரப்பான ஆட்டத்தில் குஜராத் திரில் வெற்றி..! ராகுல் திவாட்டியா அபாரம்..!

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 2 பந்தில் 12 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டபோது ராகுல் திவாட்டியா கடைசி இரண்டு பந்தையும் சிக்ஸருக்கு விளாசி குஜராத் அணியை திரில் வெற்றி பெறவைத்தார். 

6 பந்தில் 19 ரன்கள் தேவை...! வெல்லப்போவது யாரு..?

குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 96 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், குஜராத் வெற்றிக்கு 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்படுகிறது. 

18 பந்துகளில் 37 ரன்கள் தேவை...! வெல்லப் போவது யாரு..?

குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 18 பந்துகளில்  37 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் ஹர்திக் பாண்ட்யாவும், சுப்மன் கில்லும் உள்ளனர்.  

தமிழக வீரர் சாய் சுதர்சன் அவுட்..!

குஜராத் அணிக்காக ஆடி வரும் சுப்மன்கில் - சாய்சுதர்சன் 2வது விக்கெட்டுக்கு 100 ரன்களை பார்ட்னர்ஷிப் மூலம் கடந்துள்ளனர். 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் எட்டியபோது சாய் சுதர்சன் 30 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டானார். 

அதிரடி காட்டும் சாய் சுதர்சன் - சுப்மன்கில் ஜோடி..!

சுப்மன்கில் அதிரடி மற்றும் சாய் சுதர்சன் அதிரடியால் குஜராத் அணி 6 ஓவர்களில் 52 ரன்களை கடந்து ஆடி வருகிறது.

சுப்மன்கில்லுடன் ஜோடி சேர்ந்தார் தமிழக வீரர் சாய் சுதர்சன்...!

குஜராத் அணியிஜ் மேத்யூ வேட் ஆட்டமிழந்ததால் குஜராத் அணியின் புதிய வீரராக தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் களமிறங்கியுள்ளார். சுப்மன் கில் அதிரடியால் பஞ்சாப் 4 ஓவர்களில் 37 ரன்களை விளாசியுள்ளது.

கடைசி கட்டத்தில் பஞ்சாப் அதிரடி...! குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு...!

பஞ்சாப் அணியின் ராகுல் சாஹர்- அர்ஷ்தீப் அதிரடியால் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 189 ரன்களை எடுத்தது. இதனால், குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  

8வது விக்கெட்டை இழந்த பஞ்சாப்..!

பஞ்சாப் அணியின் ககிசோ ரபாடா 1 ரன் எடுத்த நிலையில் அவுட்டானதால் பஞ்சாப் அணி 8வது விக்கெட்டை இழந்துள்ளது. 

லிவிங்ஸ்டன், ஷாரூக்கானை ஒரே ஓவரில் காலி செய்த ரஷீத்கான்..!

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் 27 பந்தில் 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 64 ரன்களை எடுத்த நிலையில் ரஷீத்கான் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த அதே ஓவரில் நம்பிக்கை அளித்த ஷாரூக்கானும் 8 பந்தில் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். 

லிவிங்ஸ்டன் - ஷாரூக் அதிரடி..! 15 ஓவர்களில் 150 ரன்களை கடந்த பஞ்சாப்..!

முகமது ஷமியும், ஷாரூக்கானும் அடுத்தடுத்து அதிரடி காட்டியதால் பஞ்சாப் அணி 15 ஓவர்களில் 152 ரன்களை எட்டியது. 

அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள்...! இளம் வீரர் நல்கண்டே கலக்கல்..!

குஜராத் இளம் வீரர் நல்கண்டேவின் 14வது ஓவரில் அதிரடி காட்டிய ஜிதேஷ் சர்மா 23 ரன்களிலும், ஓடீன் ஸ்மித் 0 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதிரடி காட்டிய ஜிதேஷ் சர்மா அவுட்..! நாகல்கண்டேவிற்கு முதல் விக்கெட்..!

குஜராத் வீரர் ராகுல் திவேதியாவின் ஒரே ஓவரில் 24 ரன்களை ஜிதேஷ் சர்மாவும், லிவிங்ஸ்டன் விளாசினர். அடுத்த ஓவரில் அதிரடி காட்டிய ஜிதேஷ் சர்மா 11 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். 

அதிர்ஷ்டத்தால் தப்பித்த லிவிங்ஸ்டன்..! அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

பஞ்சாப் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் லிவிங்ஸ்டன் குஜராத் வீரர் ரஷீத்கான் பந்தில் கொடுத்த கடினமான கேட்ச்சை ஹர்திக் பாண்ட்யா பிடித்தார். ஆனாலும், அந்த கேட்ச்சின் போது ஹர்திக் பவுண்டரி எல்லையை மிதித்ததால் மூன்றாவது அம்பயரால் சிக்ஸ் கொடுக்கப்பட்டது.  

பஞ்சாப் டேஞ்சர் பேட்ஸ்மேன் ஜானி பார்ஸ்டோ அவுட்..!

பஞ்சாப் அணியின் அதிரடி வீரர் ஜானி பார்ஸ்டோ 8 பந்தில் 2 பவுண்டரியுடன் 8 ரன்களுடன் பெர்குசன் பந்தில் ஆடடமிழந்தார். 

பஞ்சாப் நிதான தொடக்கம்..! 4 ஓவர்களில் 25 ரன்கள்..!

குஜராத் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் பஞ்சாப் அணி 4 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்துள்ளது. பார்ஸ்டோ 8 ரன்களுடனும், தவான் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

பஞ்சாப் கேப்டன் மயங்க் அகர்வாலை அவுட்டாக்கிய குஜராத் கேப்டன் ஹர்திக்...!

பஞ்சாப் அணியின்  தொடக்க வீரரும், கேப்டனுமான மயங்க் அகர்வால் 9 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பஞ்சாப்பில் ஜானி பார்ஸ்டோ...! குஜராத்தில் சாய் சுதர்சன்...!

பஞ்சாப் அணியில் தன்னோட முதல் போட்டியில் ஜானி பார்ஸ்டோ அறிமுகமாகிறார். அதேபோல, குஜராத் அணியில் விஜய் சங்கருக்கு பதிலாக மற்றொரு தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகமாகியுள்ளார். 

100வது சிக்ஸரை அடிப்பாரா ஹர்திக் பாண்ட்யா...?

ஐ.பி.எல். போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடிக்க ஹர்திக் பாண்ட்யாவிற்கு 1 சிக்ஸர் மட்டுமே தேவைப்படுகிறது. 

Background

மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெறும் 16வது ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிகளும், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி 2 போட்டியில் ஆடி 2லும் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி 3 போட்டியில் ஆடி 2 வெற்றி 1 தோல்வியுடன் 5வது இடத்தில் உள்ளது. குஜராத் அணியின் வெற்றிப்பயணம் தொடருமா? அல்லது குஜராத்தின் வெற்றிக்கு பஞ்சாப் முட்டுக்கட்டை போடுமா? என்று  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.