ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி,5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்:


ஈரோடு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டிசம்பர், 14, 2024 உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அந்ததொகுதிக்கு பிப்ரவரி 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்றார். அவரது மறைவிற்கு பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தார். அவரது மறைவிற்கு பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் இது. மூன்று ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 



தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்குக்கான தேதியை அறிவித்தார். அதோடு, ஈரோடு கிழக்கு தொகுதிக்கான தேர்தல் தேதியையும் அறிவித்தார். 


2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. புதிய அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது. இம்முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க. - காரங்கிரஸ் கூட்டணி யார் போட்டியிடுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



  • வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் - 10.01.2025

  • வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - 17.01.2025

  • வேப்பு மனு திரும்ப பெற கடைசி நாள் - 20.01.2025


வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி, 8-ம் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.




மேலும் வாசிக்க..


HMPV vs Covid-19: எச்.எம்.பி.வி. வைரசுக்கும், கொரோனா வைரசுக்கும் இத்தனை ஒற்றுமையா? இதைப் படிங்க!


Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபிக்கு புதிய கேப்டன்? ரோகித் vs பாண்டியா.. உத்தேச அணி இது தான்!