டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமான சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி:
டெல்லி சட்டமன்றத்திம் காலம் பிப்ரவரி 23-ம் தேதி முடிவடைகிறது. 70 தொகுதிகளை கொண்ட சட்டமன்றத்திற்கு பிப்ரவரி -5 தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிப்.8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
டெல்லி சட்டமன்ற தேர்தல் 2025
வாக்காளர்கள் விவரம்:
- ஆண் வாக்களர்கள் - 83.49 லட்சம்
- பெண் வாக்களர்கள் - 71.74 லட்சம்
- மொத்த வாக்காளர்கள் -1.55 கோடி
2020 டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. 70 தொகுதிகளில் 8-ல் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றிருந்தது. காங்கிரஸ் கட்சியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும் நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. என மும்முனை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்,” இந்தியாவில் 99 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள். முதல்முறையாக 99 மில்லியன் வாக்காளர்களை கடந்துள்ளது. 100 கோடி வாக்காளர்கள் என்பதை இந்தியா விரைவில் அடையும். பெண் வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிப்பதும் அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்தார்.
மில்கிபூர் (Milkipur) இடைத்தேர்தல் தேதி:
உத்தரபிரதேசத்தின் புகழ்பெற்ற மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி, 5-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Awadhesh Prasad எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகியதால் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியில் சமாஜ்வாடி கட்சிக்கும் பா.ஜ.க.விற்கும் இடையே மீண்டும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வாசிக்க..