MS Dhoni latest: சூரத்தில் தோனி... வைரலாகும் புகைப்படம் - சிஎஸ்கே போட்ட மாஸ்டர் ப்ளான் இதுதான்!
கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பயோ பபிள் முறையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஐபிஎல் தொடருக்கான ஆயத்த பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூரத் நகரில் பயிற்சி மேற்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. அதனை அடுத்து, இன்று சூரத் சென்ற சென்னை அணி கேப்டன் தோனியின் புகைப்படம் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
2022-ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் இறுதியில் தொடங்க இருப்பதாகவும், இம்முறை கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரின் முதல் சுற்று போட்டிகள் அனைத்தும் மகாராஷ்டிராவில் பயோ பபிள் முறையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#THA7A Dharisanam!💥🦁#SingamsInSurat #WhistlePodu 🦁💛 pic.twitter.com/TF2pldRAPl
— Chennai Super Kings - Mask P😷du Whistle P🥳du! (@ChennaiIPL) March 2, 2022
🚨 NEWS: Key decisions taken in IPL Governing Council meeting regarding #TATAIPL 2022 Season.
— IndianPremierLeague (@IPL) February 25, 2022
Tournament to commence on March 26, 2022. Final on May 29, 2022.
7⃣0⃣ league matches to be played across 4⃣ venues in Mumbai & Pune. Playoff venues to be decided later.
Details 🔽
இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான போட்டிகள் மும்பையில் மார்ச் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி முடிய உள்ளது. இந்த 2022 தொடரில் இரண்டு புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதால். மொத்தம் 70 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. மும்பை, பூனேவில் உள்ள 4 மைதானங்களில் இந்த போட்டிகள் நடைபெற உள்ளன. ப்ளே ஆஃப் சுற்று போட்டிகளுக்கான மைதானங்கள் பற்றிய அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.
அதனை அடுத்து, ஐபிஎல் தொடரில் பங்கேற்க இருக்கும் அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் விளையாடும். இதனால், லீக் சுற்று போட்டிகளில் விளையாடும் முன், சூரத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் சென்னை அணி பயிற்சி மேற்கொள்ள உள்ளது. மார்ச் 8-ம் தேதி தொடங்கும் இந்த பயிற்சிக்காக அணி வீரர்கள் சூரத் சென்றுள்ளனர். மும்பையில் உள்ள மைதானங்களை போன்றதொரு பிட்சில் பயிற்சி மேற்கொள்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்