IPL Auction 2025:கேப்டனையே கழட்டி விட தயாராகும் கேகேஆர்!அடுத்த மூவ் என்ன?
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல்2025:
2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதில் தங்கள் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவிக்கும் என கூறப்பட்டு உள்ளது.ஐபிஎல் சீசன் 18 அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலாம் நடைபெறும் அதே நேரம் அக்டோபர் 30 தேதிக்குள் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் தொடர்பான தகவலை சமர்பிக்க வேண்டும் என்று ஐபிஎல் நிர்வாகம் கூறியிருக்கிறது.
ஸ்ரேயாஸ் ஐயரை கழட்டி விடும் கேகேஆர்:
முன்னதாக லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை இந்த முறை விடுவித்து மற்ற வீரர்களான நிக்கோலஸ் பூரன், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய், ஆயுஷ் பதோனி மற்றும் மோகிஷ் கான் ஆகியோரை தக்கவைக்கும் என்பது தொடர்பான தகவல் நேற்று வெளியானது. இந்த நிலையில் தான் இன்று 2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி எந்தெந்த வீரர்களை தக்க வைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதில் தங்கள் அணிக்கு கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை அந்த அணி விடுவிக்கும் என கூறப்பட்டு உள்ளது. தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் கவுதம் கம்பீர் தான் ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் பயிற்சியாளர் கம்பீருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு கொடுப்பதில்லை. கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் சீசன் 17ல் சாம்பியன் பட்டத்தை வென்ற கொடுத்த பின்னரும் கூட அவருக்கு அந்த அணியில் மரியாதை கிடைக்கவில்லை என்பது போன்ற தகவல் எல்லாம் வெளியானது.
இச்சூழலில் தான் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவிக்க உள்ளது.2025 ஐபிஎல் மெகா ஏலத்துக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சுனில் நரைன், ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தி ஆகிய மூவரையும் சர்வதேச போட்டிகளில் ஆடிய வீரர்களாக தக்க வைக்க உள்ளது. ஹர்ஷித் ரானாவை உள்ளூர் வீரராக தக்க வைக்க உள்ளது. மேலும் பல ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடி வரும் ஆல் கவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலையும் அந்த அணி விடுவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.