மேலும் அறிய

IPL Points Table: சன்ரைசர்ஸை சட்னியாக்கிய குஜராத்! 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி - டேபிள் டாப்பில் கில் பாய்ஸ்

இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ், 8 வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது.

ஐபிஎல் 2026 தொடரின் 56-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை துவம்சம் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி, 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், குஜராத் அணி 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் கம்பீரமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிளே-ஆஃப் ரேஸில் குஜராத்தின் ஆதிக்கம்

இந்த சீசனில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள குஜராத் டைட்டன்ஸ், 8 வெற்றிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளது. அதே சமயம் 12 போட்டிகளில் தனது 5-வது தோல்வியைத் தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. இதற்கிடையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் ஏற்கனவே பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

காப்பாற்றிய சுதர்சன் - வாஷிங்டன் சுந்தர் கூட்டணி

நரேந்திர மோடி மைதானத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 26 ரன்களுக்கு தத்தளித்த குஜராத் அணியை சாய் சுதர்சன் மீட்டெடுத்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு நிஷாந்த் சிந்துவுடன் இணைந்து 38 ரன்கள் சேர்த்தார். சிந்து 22 ரன்களில் வெளியேற, பின்னர் களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் - சாய் சுதர்சன் ஜோடி அதிரடியாக விளையாடி 41 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தது. சாய் சுதர்சன் 61 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும் குவித்து அணி 168 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட உதவினர்.

சீட்டுக்கட்டாய் சரிந்த சன்ரைசர்ஸ் 

169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ரன் ஏதுமின்றி முதல் ஓவரிலேயே வெளியேற, அடுத்து வந்த அபிஷேக் சர்மாவும் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இஷான் கிஷன், ஹென்றிச் கிளாசன் என முன்னணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணியால் மீண்டு வர முடியவில்லை. இறுதியில் 14.5 ஓவர்களிலேயே சன்ரைசர்ஸ் அணி 86 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

ரபாடா மற்றும் ஹோல்டர் சம்பவம்

குஜராத் அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர். ககிசோ ரபாடா மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத் அணியின் பேட்டிங் முதுகெலும்பை உடைத்தனர். இவர்களுடன் பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி குஜராத் அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget