லட்சுமிபதி பாலாஜி முதல் ஹர்ஷல் படேல் வரை : IPL-இல் ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தவர்கள் யார்? யார்?
2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலை கீழே காணலாம்.
துபாயில் நேற்று மும்பை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் இந்த வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் முக்கிய பங்காற்றினார். அவர் 3.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஹர்ஷல் பட்டேல் தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்த தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை முதலில் கைப்பற்றியவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இதன்மூலம் ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலில் 19வது வீரராக இணைந்துள்ளார். இதற்கு முன்பு, ஐ.பி.எல். தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றியவர்கள் பட்டியலை காணலாம்.
2008 :
- லட்சுமிபதி பாலாஜி :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சாளர் லட்சுமிபதி பாலாஜி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஐ.பி.எல். தொடரில் முதன்முதலில் ஹாட்ரிக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
- மகாயா நிடினி :
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக சென்னை அணிக்காக ங களமிறங்கிய மகாயா நிடினி ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- அமித் மிஸ்ரா :
டெல்லி அணிக்காக ஆடிய அமித் மிஸ்ரா அப்போதைய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2009:
- யுவராஜ் சிங் :
ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்தபோது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ரோகித் சர்மா:
தற்போதைய மும்பை அணியின் கேப்டனான ரோகித்சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது, மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2010:
- பிரவீன்குமார் :
பெங்களூர் அணிக்காக ஆடிய பிரவீன்குமார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தனது வேகப்பந்துவீச்சு மூலம் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
2011:
- அமித் மிஸ்ரா :
2008ம் ஆண்டு ஏற்கனவே ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த அமித் மிஸ்ரா, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2012:
- அஜித் சண்டிலா
புனே வாரியர்ஸ் அணிக்காக ஆடியபோது ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2013:
- அமித் மிஸ்ரா:
ஐ.பி.எல். வரலாற்றில் இரு முறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்திய அமித்மிஸ்ரா மூன்றாவது முறையாக சன்ரைசர்ஸ் அணிக்காக ஆடியபோது ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்.
- சுனில் நரைன்:
கொல்கத்தா அணிக்காக களமிறங்கிய சுனில் நரைன் பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
2014:
- பிரவீன்தாம்பே:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய பிரவீன்தாம்பே கொல்கத்தா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
- ஷேன் வாட்சன்:
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய ஷேன் வாட்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஆடியபோது ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
2016:
- அக்ஷர் படேல்
டெல்லி அணிக்காக ஆடிய அக்ஷர் படேல் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக தனது முதல் ஹாட்ரிக் சாதனையை படைத்தார்.
2017:
- சாமுவேல் பத்ரி :
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடிய சாமுவேல் பத்ரி பஞ்சாப் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஆண்ட்ரூ டை:
குஜராத் லயன்ஸ் அணிக்காக ஆடிய ஆண்ட்ரூ டை புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- ஜெய்தேவ் உடன்கட்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஜெய்தேவ் உடன்கட் ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2019:
- சாம் கரன்:
அறிமுகமான முதல் ஐ.பி.எல். தொடரிலே பஞ்சாப் அணிக்காக ஆடிய சாம்கரன் டெல்லிக்கு எதிராக ஹாட்ரிக் கைப்பற்றினார்.
- ஸ்ரேயாஸ் கோபால்:
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஸ்ரேயாஸ் கோபால் பெங்களூர் அணிக்கு எதிராக முதல் ஹாட்ரிக் சாதனையை நிகழ்த்தினார்.
2021:
- ஹர்ஷல் படேல்:
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூர் வீரர் ஹர்ஷல் படேல் மும்பை அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.