RR vs RCB LIVE Score: சதத்துடன் ஆட்டத்தை வென்று கொடுத்த ஜோஸ் பட்லர்; வீணாய்ப் போன விராட் சதம்!
IPL 2024 RR vs RCB LIVE Score Updates:ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
ராஜஸ்தான் அணி 19.1ஓவர்களில் 4விக்கெட்டினை இழந்து 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இறுதிவரை களத்தில் இருந்த பட்லர் 58 பந்தில் 9 பவுண்டரி 4 சிக்ஸர் விளாசி 100 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டி ஐபிஎல் தொடரில் ஜோஸ் பட்லரின் 100வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
86 பந்துகளில் 147 ரன்கள் சேர்த்த நிலையில் சாம்சன் மற்றும் பட்லர் கூட்டணி பிரிந்தது. சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டினை 42 பந்துகளில் 69 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 145 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
12 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 124 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 109 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
33 பந்துகளில் சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தினை விளாசியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லர் 30 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இந்த போட்டி ஐபிஎல் தொடரில் இவரது 100வது போட்டி ஆகும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9.4 ஓவரில் 93 ரன்கள் சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 54 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் முதல் பவுண்டரியை சஞ்சு சாம்சன் விளாசியுள்ளார்.
முதல் ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டினை இழந்து ஒரு ரன் சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் தனது விக்கெட்டினை சில்வர் டக் அவுட் முறையில் தான் எதிர்கொண்ட இரண்டாவது பந்தில் வெளியேறினார்.
184 ரன்கள் இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் படலர் களமிறங்கியுள்ளனர்.
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் குவித்தது. இறுதிவரை களத்தில் இருந்த விராட் கோலி 72 பந்துகளில் 113 ரன்கள் எடுத்திருந்தார்.
பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது.
களம் இறங்கிய சில நிமிடங்களில் 1 ரன் மட்டுமே எடுத்து மேக்ஸ்வெக் விக்கெட்டை பறிகொடுத்து நடையைக்கட்டினார்.
நிதானமாக விளையாடி வந்த பெங்களூரு அணி வீரர் டூ பிளெசிஸ் விக்கெட்டை பறிகொடுத்தார். 33 பந்துகள் களத்தில் நின்ற அவர் 44 ரன்களில் அவுட்.
13 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 115 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
12 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் எடுத்துள்ளது.
விக்கெட் இழப்பின்றி பெங்களூரு அணி 11.3 ஓவர்களில் 101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி அரைசதம் விளாசியுள்ளார். அந்த வகையில், 40 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்கள் என மொத்தம் 53 ரன்கள் எடுத்துள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 89 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 64 ரன்கள் சேர்த்து நிதானமாக ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி பெங்களூரு அணி 60 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி இதுவரை ஐபிஎல் போட்டிகளில் மட்டும் 7500 ரன்கள் குவித்துள்ளார்.
பவர்ப்ளேவில் பெங்களூரு அணி 6 பவுண்டரிகளையு ஒரு சிக்ஸரையும் விளாசியுள்ளது.
பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணி 5.2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் ஐந்தாவது ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து பெங்களூரின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார். 5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 45 ரன்கள் சேர்த்துள்ளது.
நான்கு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் குவித்து அதிரடியாக விளையாடி வருகின்றது.
போட்டியின் 4வது ஓவரில் சிக்ஸர் விளாசி ஆட்டத்தின் சிக்ஸர் கணக்கை தொடங்கி வைத்துள்ளார் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி.
மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
போட்டியின் இரண்டாவது ஓவரில் விராட் கோலி இரண்டு பவுண்டரி விளாசி தனது பவுண்டரிக் கணக்கைத் தொடங்கினார்.
முதல் ஓவரின் கடைசி பந்தில் டூ பிளெசிஸ் பவுண்டரி விளாசி இந்த ஆட்டத்தின் பவுண்டரி கணக்கைத் தொடங்கி வைத்தார். முதல் ஓவரில் பெங்களூரு அணி 8 ரன்கள் சேர்த்துள்ளது.
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு அணி களமிறங்கியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் (ப்ளேயிங் லெவன்): யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(விக்கெட் கீப்பர் மற்றும் கேப்டன்), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), சவுரவ் சவுகான், ரீஸ் டாப்லி, மயங்க் டாகர், முகமது சிராஜ், யாஷ் தயாள்
பெங்களூருக்கு எதிரான் போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
நடப்பு ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டியில் முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றது. இந்த போட்டி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்கியுள்ளது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலாக மைதானத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் சந்தித்து, மூன்று போட்டிகளில் தோல்வியை எதிர்கொண்டுள்ளது. இதனால் ராயல் சேலன்ஞ்சர்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதனால் ராஜஸ்தான் அணி இதுவரை ஒரு போட்டியில் கூட தோல்வியைச் சந்திக்கவில்லை.
இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டி முடிவு எட்டப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. ஒரு போட்டி தடைபட்டது.
இன்றைய போட்டி நடைபெறும் ஜெய்ப்பூர் மைதானத்தில் இதுவரை இரு அணிகளும் தலா 8 போட்டிகளில் மோதியுள்ளது. இரு அணிகளும் தலா நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மைதானத்தில் நடப்பு சீசனில் இதுவரை இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 193 ரன்களையும் , இரண்டாவது போட்டியில் 185 ரன்களையும் எடுத்துள்ளது. இந்த மைதானத்தில் இதுவரை மொத்தம் 54 ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 34 போட்டிகளில் சேஸிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -