மேலும் அறிய

IPL 2024 Points Table: இரண்டாவது இடத்துக்கு தாவிய ஹைதராபாத்.. சென்னை அணியின் நிலைமை என்ன..? முழு விவரம் இதோ!

IPL 2024 Points Table: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது என்று கீழே பார்க்கலாம். 

ஐபிஎல் 2024ன் 35வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டெல்லி அணிக்கு எதிரான வெற்றியின் மூலம், ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. 

ஹைதராபாத் அணி டெல்லி அணியை தோற்கடித்து இந்த சீசனில் 5வது வெற்றியை பதிவு செய்தது. இதன்மூலம், 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. அதே நேரத்தில் தோல்வியை சந்தித்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.477 உடன் ஏழாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும். 

முதல் 4 அணிகள் எது..? 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ராஜஸ்தான் இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. பின்னர் தலா 8 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் முறையே மூன்று மற்றும் நான்காபது இடத்தில் உள்ளன. கொல்கத்தா +1.399 என்ற நிகர ரன் ரேட்டையும், சென்னை +0.529 என்ற நிகர ரன் ரேட்டையும் கொண்டுள்ளது. 

மற்ற அணிகளின் நிலை என்ன..? 

 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. தலா 6 புள்ளிகளுடன்  மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் முறையே 6, 7 மற்றும் எட்டாவது இடங்களில் உள்ளன.

புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு நகர்ந்த பஞ்சாப் கிங்ஸ் 4 புள்ளிகளுடன் 9வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் காணப்படுகின்றன. பஞ்சாப் இதுவரை 7ல் 2 வெற்றிகளையும், பெங்களூரு 7ல் 1 வெற்றியையும் பெற்றுள்ளது. 

டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கு பிறகு எந்தெந்த அணிகள் எந்த இடத்தில் உள்ளது என்று கீழே பார்க்கலாம். 

ஐபிஎல் 2024 - முழு புள்ளிகள் அட்டவணை: 

தரவரிசை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டை

புள்ளிகள்

ரன் ரேட்

1

ராஜஸ்தான் ராயல்ஸ் (RR)

7

6

1

0

12

+0.677

2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH)

7

5

2

0

10

+0.914

3

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR)

6

4

2

0

8

+1.399

4

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK)

7

4

3

0

8

+0.529

5

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG)

7

4

3

0

8

+0.123

6

மும்பை இந்தியன்ஸ் (MI)

7

3

4

0

6

-0.133

7

டெல்லி கேப்பிடல்ஸ் (DC)

8

3

5

0

6

-0.477

8

குஜராத் டைட்டன்ஸ் (GT)

7

3

4

0

6

-1.303

9

பஞ்சாப் கிங்ஸ் (PBKS)

7

2

5

0

4

-0.251

10

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB)

7

1

6

0

2

-1.185

ஆரஞ்சு கேப்: (அதிக ரன்கள்)

1. விராட் கோலி (RCB) - 7 போட்டிகள், 361 ரன்கள், சராசரி: 72.2
2. டிராவிஸ் ஹெட் (SRH) - 6 போட்டிகள், 324 ரன்கள், சராசரி: 54.00
3.  ரியான் பராக் (RR) - 7 போட்டிகள், 318 ரன்கள், சராசரி: 63.6
4.  ரோஹித் சர்மா (MI) - 7 போட்டிகள், 297 ரன்கள், சராசரி: 49.5
5. கேஎல் ராகுல் (KKR) - 7 போட்டிகள், 286 ரன்கள், சராசரி: 40.85

பர்பிள் கேப்: (அதிக விக்கெட்கள்)

1. ஜஸ்பிரித் பும்ரா (MI) - 7 போட்டிகள், 13 விக்கெட்டுகள், எகானமி: 5.96
2. ஜெரால்ட் கோட்ஸி (MI) - 7 போட்டிகள், 12 விக்கெட்கள், எகானமி: 9.92
3. யுஸ்வேந்திர சாஹல் (RR) -  7 போட்டிகள், 12 விக்கெட்டுகள், எகானமி 8.34
4. முஸ்தாபிசுர் ரஹ்மான் (CSK) - 6 போட்டிகள், 11 விக்கெட்டுகள், எகானமி: 9.41
5. ஹர்ஷல் படேல் (PBKS) - 7 போட்டிகள், 10 விக்கெட்டுகள், எகானமி: 10.11

தலைப்பு செய்திகள்

DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Cheapest Compact SUV: நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
MK Stalin: லண்டனில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின்.. விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
தவெக- எம்.எல்.ஏ., தங்கபாண்டியன் கார் முற்றுகை: பதவி கிடைக்காததால் கொதித்த தொண்டர்கள்!
Embed widget