PBKS vs MI LIVE Score: வெற்றியை தவறவிட்ட பஞ்சாப்; போராடி வென்ற மும்பை!
IPL 2024 PBKS vs MI LIVE Score Updates: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
கடைசி ஓவரில் பஞ்சாப் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. 20வது ஓவரின் முதல் பந்தினை மத்வால் வைடாக வீச, அடுத்த பந்தை எதிர்கொண்ட ரபாடா அடித்துவிட்டு இரண்டு ரன்களுக்கு ஓட, அதற்குள் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால் மும்பை அணி 19.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் அணியின் வெற்றி நாயகனாக பார்க்கப்பட்ட அஷுதோஷ் சர்மா தனது விக்கெட்டினை 28 பந்தில் 61 ரன்கள் சேர்த்து கோட்ஸீ வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில் இழந்து வெளியேறினார்.
ஆட்டத்தின் 16வது ஓவரினை வீசிய மத்வால், அந்த ஓவரில், மூன்று வைய்டு, மூன்று சிக்ஸர், ஒரு நோபால் உட்பட மொத்தம் 24 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார். இதனால் 16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 165 ரன்கள் சேர்த்துள்ளது.
7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த அணியை அஷுதோஷ் சர்மா பொறுப்பாக விளையாடி ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கை கொடுத்துள்ளனர்.
பஞ்சாப் அணியை சரிவில் இருந்து மீட்கும் பணியை சிறப்பாக செய்து வரும் அஷுதோஷ் சர்மா தனது முதல் ஐபிஎல் அரைசதத்தினை 23 பந்தில் எடுத்தார்.
15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
அணியின் ஸ்கோர் 111 ரன்களில் இருந்தபோது ஷஷாங்க் சிங் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 12.1 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 111 ரன்கள் எடுத்துள்ளது.
பஞ்சாப் அணி 11 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஜிதேஷ் சர்மா 9 பந்தில் 9 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி தனது 6வது விக்கெட்டினை இழந்துள்ளது.
ஆட்டத்தின் 9வது ஓவரில் ஷஷாங்க் சிங் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு அமர்க்களப்படுத்தினார். இதனால் 9 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்கள் சேர்த்துள்ளது.
5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துவரும் பஞ்சாப் அணி 7 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் ஹர்ப்ரீத் பாடியா தனது விக்கெட்டினை ஸ்ரேயாஸ் கோபால் வீசிய 7வது ஓவரில் இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 40 ரன்கள் சேர்த்து தடுமாற்றமான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
பஞ்சாப் அணி தனது 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகின்றது. 5 ஓவர்கள் முடிவில் 39 ரன்கள் சேர்த்துள்ளது.
20வது ஓவரில் டிம் டேவிட் சிக்ஸர் விளாச முயற்சி செய்து தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ஷெப்பர்ட் ஒரு ரன்னில் அவுட் ஆனார். கடைசி பந்தில் நபி ரன் அவுட் ஆனார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் சேர்த்தது.
18வது ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இந்த ஓவர் முடிவில் மும்பை அணி 167 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
53 பந்தில் 7 பவுண்டரி மூன்று சிக்ஸர் விளாசி 78 ரன்கள் சேர்த்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார்.
16 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டினை இழந்து 148 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
14 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11.5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
11.5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
57 பந்தில் 81 ரன்கள் சேர்த்த ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி பிரிந்தது.
ரோகித் சர்மா தனது விக்கெட்டினை 25 பந்தில் 36 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இந்த போட்டி இவரது 250வது ஐபிஎல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 96 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
சூர்யகுமார் யாதவ் 34 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். இவர் இதுவரை ஐந்து பவுண்டரி இரண்டு சிக்ஸர் விளாசியுள்ளார்.
10 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 86 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
37 பந்துகளில் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் கூட்டணி 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 68 ரன்கள் சேர்த்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 43 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நான்கு ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 36 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4வது ஓவரின் மூன்றாவது பந்தில் ரோகித் சர்மா தனது முதல் சிக்ஸரை விளாசினார்.
மூன்றாவது ஓவரின் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தினை பவுண்டரிக்கு விளாசினார் சூர்யகுமார் யாதவ்.
சூர்யகுமார் யாதவ் தனது ஸ்கோரை பவுண்டரியுடன் தொடங்கியுள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தனது ஸ்கோரை பவுண்டரியுடன் தொடங்கியுள்ளார்.
இஷான் கிஷன் தனது விக்கெட்டினை ரபாடா பந்தில் இழந்து வெளியேறினார். இவர் 8 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
மும்பை அணி 2 ஓவர்கள் முடிவில் 18 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
முதல் ஓவர் முடிவில் மும்பை அணி 7 ரன்கள் சேர்த்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.
டாஸ் வென்ற பஞ்சாப் அணி மும்பை அணிக்கு எதிராக பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
17வது ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி சண்டிகரில் உள்ள மஹாராஜா யாதவிந்திர மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் நடப்புத் தொடரில் இதுவரை தலா ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகளில் தோல்வியைச் சந்தித்தும் இரண்டு போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளது. இதனால் இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் எட்டு மற்றும் ஒன்பதாவது இடத்தில் அடுத்தடுத்துள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை மொத்தம் 31 போட்டிகளில் மோதியுள்ளன. இந்த மோதலில் பஞ்சாப் அணி 15 போட்டிகளிலும், மும்பை அணி 16 போட்டிகளும் வெற்றி பெற்றுள்ளன. இன்று தனது சொந்த மண்ணில் களமிறங்கும் பஞ்சாப் அணி வெற்றி பெற்று வெற்றி விகிதத்தினை சரிசமமாக மாற்றும் என பஞ்சாப் ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் அணியின் அதிகபட்ச ஸ்கோர் 230 ரன்களாக உள்ளது. அதே நேரத்தில், பஞ்சாப் அணிக்கு எதிரான மும்பை அணியின் அதிகபட்ச ஸ்கோர் 223 ரன்களாக உள்ளது.
ரோகித் சர்மாவுக்கு 250வது போட்டி
இன்றைய போட்டி மும்பை அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்கவீரருமான ரோகித் சர்மவுக்கு ஐபிஎல் தொடரில் 250வது போட்டி ஆகும். இதுவரை 249 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா, 6 ஆயிரத்து 472 ரன்கள் குவித்துள்ளார். இதில் இரண்டு சதங்களும் 42 அரைசதங்களும் அடங்கும். இதில் ரோகித் சர்மா 582 பவுண்டரிகள் விளாசியதும் 272 சிக்ஸர்கள் பறக்கவிட்டதும் அடங்கும். ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து மொத்தம் 15 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா சேஸிங்கில் தனி ஒரு நபராக தொடக்கம் முதல் கடைசி வரை களத்தில் இருந்து சதம் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி ரன்கள் குவிப்பார் என ரோகித் சர்மா ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -