தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2008 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். 18 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு பின் இருவரும் பிரிந்து வாழ முடிவெடுத்து 2022 ஆம் ஆண்டு விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தார்கள். விவாகரத்தை அறிவித்தபின் இருவரும் தனித்தனியாக வசிக்க தொடங்கினர். இந்த தம்பதிக்கு யாத்ரா , லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த இரு ஆண்டுகளாக தந்தையுடன் கொஞ்ச நாட்களும் தாயுடன் கொஞ்ச நாளும் நேரத்தை செலவிட்டு வந்தார்கள். நடிகர் தனுஷ் படப்பிடிப்பில் இருக்கையில் , சினிமா நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போதும் தனது மகன்களுடன் காணப்பட்டு வந்தார்.
தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையில் சட்டரீதியாக விவாகரத்து பெற கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் மூன்று முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது . மூன்று முறையும் இருதரப்பினரும் ஆஜராகாத காரணத்தால் இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளதாக ரசிகர்கள் நம்பினார்கள். கடந்த நவம்பர் 21 ஆம் தேதி நான்காவது முறையாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருதரப்பும் ஆஜராகினர். இருதரப்பின் முடிவை கேட்டபின் இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சுபாதேசி நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
நேற்று நவம்பர் 29 ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவுக்கு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து வழங்கப்பட்டது. கொஞ்ச காலம் நப்பாசையில் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்தது.
கோ பேரண்டிங் முறையில் குழந்தைகளை வளர்க்க முடிவு
சட்டப்பூர்வமாக இருவரும் விவாகரத்து பெற்றுள்ள நிலையில் யாத்ரா மற்றும் லிங்கா யாருடன் இருக்கப் போகிறார்கள் என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இது குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் இரு மகன்களை கோ பேரண்டிங் முறையில் வளர்க்க முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. கொஞ்ச நாட்கள் தந்தையும் கொஞ்ச நாட்கள் தாயிடமும் குழந்தைகள் சுழற்சி முறையில் இருப்பார்கள் என்றும் இருவரது கல்வி மற்றும் இதர பொருளாதார ரீதியான பொறுப்புகளை இருதரப்பினரும் சமமாக பகிர்ந்துகொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
தங்களது விவாகரத்து முடிவு தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தில் எந்த வித பாதிப்பும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காக இந்த முடிவை தனுஷ் ஐஸ்வர்யா எடுத்துள்ளதாக தெரிகிறது.