Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE Updates: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக உருவெடுத்துள்ளது. மழை உள்ளிட்ட வானிலை நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
ஜேம்ஸ்Last Updated: 30 Nov 2024 08:00 PM
Background
Fengal Cyclone LIVE Updates:தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நவம்பர் 30 ஆம் தேதி ( நாளை) மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக...More
Fengal Cyclone LIVE Updates:தென் மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நவம்பர் 30 ஆம் தேதி ( நாளை) மாமல்லபுரம்- காரைக்கால் இடையே நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கனமழை எச்சரிக்கை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.பெரும்பாலான இடங்களில் மழைஇதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது சென்னைக்கு தென்கிழக்கில் 470 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 410 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை: கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.தேர்வுகள் ஒத்திவைப்பு: கனமழை எதிரொலியாக அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் இன்று நடைப்பெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fengal Cyclone LIVE: தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வராதீர் - புதுச்சேரி அரசு
புயல் கரையை கடப்பதால் இன்றிரவு முதல் நாளை அதிகாலை வரை பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வெளியே வரவேண்டாம் என்று புதுச்சேரி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்க உள்ளது புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் எதிரொலி தியேட்டர்கள் அனைத்தும் மூடல்
ஃபெஞ்சல் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தீவிர கன மழை பெய்து வருவதால், அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என்று தியேட்டர்கள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல்! தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு பல மாவட்டங்களில் விடுமுறை!
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் நாளை கடலூர், விழுப்புரம், திருவள்ளூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள நடத்தக்கூடாது எனவும் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.
Fengal Cyclone: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னைக்கு நாளை ரெட் அலர்ட்!
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் நாளை அதி அதி கன மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சற்று நேரம் ஓய்வெடுத்த மழை தற்போது மீண்டும் கனமழையாக தொடங்கியுள்ளது, நகரின் முக்கிய இடங்களான அண்ணா சாலை, பாரிமுனை, கிண்டி, தி நகர் ஆகிய இடங்களில் பலத்த மழைன் பெய்து வருகிறது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து தென்கிழக்கே 380 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள நிலையில் தாழ்வு மண்டலம் நகரும் வேகமும் மணிக்கு 7கி.மீ-ல் இருந்து 8கி.மீ. ஆக அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று மணி நேரத்தில் எங்கெல்லாம் மழை தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட பதினொறு மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம் குறைந்தது
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகரும் வேகம் 9 கி.மீ.-ல் இருந்து 7கி.மீ. ஆக குறைந்துள்ளது. தற்போது இந்த காற்ற்ழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 400 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் அண்ணா சாலை, பட்டினப்பாக்கம், எண்ணூர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
சென்னையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை மழை பெய்து ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் சென்னையில் அண்ணா சாலை, பட்டினப்பாக்கம், எண்ணூர், ஆயிரம் விளக்கு ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது
Chennai School Holiday: சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை
சென்னை மாவட்டத்தில் இன்று (29.11.24) கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட ஆட்சியர் திருமதி ரஷ்மி சித்தார்த் ஜகடே, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்கள்.
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் 2 நாட்களுக்கு பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் உத்தரவு
Fengal Cyclone LIVE: புதுச்சேரியில் நாளை பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுநாள் சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன மழையை எதிர்கொள்ள என்ன ஏற்பாடுகள்? விழுப்புரம் எம்.பி. ஆய்வு!
ஃபெங்கல் புயலால் பெய்ய உள்ள கன மழையை எதிர்கொள்வதற்காக செய்யப்பட்டிருக்கும் முன்னேற்பாடுகள் குறித்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆய்வு செய்து வருகிறார்.
கடலூரில் கடலுக்குள் மாட்டிக்கொண்ட 6 மீனவர்கள்; ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!
கடலூர் மாவட்டம், தோணித் துறையில் அரசின் எச்சரிக்கையை மீறி 6 மீனவர்கள், 2 படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். கடல் சீற்றத்தால் 1 படகு கவிழ்ந்த நிலையில் 1 படகில் கரை சேர முடியாமல் தத்தளித்தனர். அவர்களை கடலோரக் காவல் படையினர் ஹெலிகாப்டரில் வந்து மீட்டனர்.
பாலத்தில் விரிசல் ஏற்பட்டு கொட்டும் மழைநீர்; மக்கள் அச்சம்!
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே நான்கு வழி தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தில் விரிசல் ஏற்பட்டு, பக்கவாட்டு சுவர்களின் வழியே அருவி போல் கொட்டும் மழை தண்ணீர். பெரிய விபத்து ஏற்படும் முன் சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விழுப்புரம், மரக்காணம் மற்றும் புதுச்சேரி பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சூறைக்காற்று வீசி வருகிறது. இதனால் மீனவர்கள் படகுகளை மேடான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர்.
காலை முதல் மேக மூட்டமாக மட்டுமே காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
Fengal Cyclone Update: தற்காலிகமாக உருவாகும் புயல்!
புயல் உருவாகும், ஆனால் தற்காலிகமானதாக இருக்கும். குறிப்பாக, வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, இன்று மாலை புயலாக வலுப்பெற்று நாளை காலை வரை புயலாக நீடிக்கும். அதனை தொடர்ந்து, வங்க கடலில் உள்ள புயலானது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்துவிடும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
Chennai Weather Update: சென்னையில் இன்று இரவு முதல் மழை - சென்னை வானிலை மையம் புது அப்டேட்
சென்னையில் இன்று இரவு முதல் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று இரவு அல்லது நாளை காலை தற்காலிக புயலாக மாறும் என தெரிவித்துள்ளது. மேலும் எதிர்க்காற்று வீசுவதால் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற காலதாமதம். காற்றின் வேகம் குறைந்ததால் மழை இல்லை. வரும் 30ஆம் தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க வாய்ப்பு
நாளை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்; அதி கனமழைக்கு வாய்ப்பு
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும் ஓரிரு இடங்களில் அதிகன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை சென்னைக்கு மிக கனமழை வாய்ப்பு; நவ.30 ரெட் அலர்ட்!
நாளை (நவ.29) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை (29ஆம் தேதி) முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும். 30ஆம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை , செங்கல்பட்டு, பாண்டிச்சேரி, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும். டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளிலும் மழைப் பொழிவு ( pull effect rains) இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் இருந்து 410 கி.மீ. தொலைவில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இதனால் இன்று மாலை அல்லது நாளை காலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் நகராமல் நிற்கும் தாழ்வு மண்டலம்: மழை குறையுமா?
வங்கக் கடலில் மெதுவாக 2 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், மீண்டும் நகராமல் நிற்கிறது. இதனால் இன்றிரவு புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட மாவட்டங்களில் மிக கனமழை; கடலோர மாவட்டங்களில் அதி கனமழை!
நவம்பர் 29, 30ஆம் தேதிகளில் தமிழக வட மாவட்டங்களில் மிக கனமழையும், கடலோர மாவட்டங்களில் அதிக கனமழையும் பெய்யக்கூடும். தமிழகத்தில் இன்று லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலைகொண்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், சென்னையில் இருந்து 480 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த சில மணி நேரங்களாக நகராமல் இருந்த நிலையில், மீண்டும் மணிக்கு 2 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்வதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: வாபஸ் வாங்கிய வானிலை மையம்!
நாளை கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு விடப்பட்ட அதி கன மழை எச்சரிக்கையானது விலக்கப்பட்டுள்ளது. எனினும் இப்பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மற்றும் விழுப்புரம் ஆகிய 11 மாவட்டங்களில் இன்று இரவு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது
மயிலாடுதுறை மாவட்டம், சந்திரபாடி என்னும் மீனவ கிராமத்தில் கடுமையாக கடல் சீற்றம் காணப்படுகிறது. கடல் அலைகள் சுமார் 10 அடி உயரத்துக்கு மேல் எழும்பியதால் ஊருக்குள் கடல் நீர் புகுந்துள்ளது.
கன மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் நாளை வியாழக்கிழமை (28/11/24) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து புயலாக உருவானதையொட்டி தஞ்சை உள்ளிட்டா டெல்டா மாவட்டங்களில் இரண்டு நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
Fengal Cyclone LIVE: எப்போது உருவாகிறது ஃபெங்கல் புயல்?
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று இரவுக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று (நவ.27) ஃபெங்கல் புயல் உருவாகும்பட்சத்தில் 30ஆம் தேதி வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களில் தரைக் காற்று வீசி வருகிறது.
கர்ப்பிணிகளுக்கு இலவசம்: இலவச வாகன சேவையை துவங்கிய தவெகவினர்
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை நேரத்தில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவை விரைந்து கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 12 இலவச தாய் சேய் வாகனங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆபத்தை உணராத ஆட்கள்; கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபாடு
விழுப்புரம், கோட்டக்குப்பம் அருகேயுள்ள தந்திராயன் குப்பம் கடற்கரையில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆபத்தை உணராமல் கடல் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்து வருகின்றனர்.
ஒரத்தநாடு அருகே நீரில் மூழ்கிய 1000 ஏக்கர் நெற்பயிர்கள்!
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே தலையாமங்கலம் ,குலமங்கலம், நெய்வாசல் தென் பாதி உட்பட சுற்றுப்பகுதிகளில் சுமார் 1000 ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் கனமழை காரணமாக நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
மரக்காணம் பகுதியில் கடல் சீற்றம் அதிக அளவு காணப்படுவதால் மரக்காணம் தீர்த்தவாரி கடற்கரை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கத்திற்கு மாறாக தற்போது வரை கடல் அதிக சீற்றத்துடன் காணப்படுகிறது.
கன மழையால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாமில் தஞ்சம்
திருத்துறைப் பூண்டியில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 150 பேர் நிவாரண முகாமில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் போதிய வசதிகளை செய்து கொடுத்து வருகிறது.
கன மழை அறிவிப்பை அடுத்து, சென்னையில் 39 இடங்களில் சிறு கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன. அங்கு தகவல் பெற்று பொது மக்களுக்கு உதவ காவல்துறை தயார் நிலையில் உள்ளது.
விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 மணி நேரத்தில் வங்கக்கடலில் ஃபெங்கல் புயல் உருவாக உள்ளதாகவும், ஃபெங்கல் புயல் சென்னையை நெருங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Fengal Cyclone LIVE: கோடியக்கரையில் 18 செ.மீட்டர் மழை பதிவு! தொடர்ந்து பெய்யும் மழையால் மக்கள் அவதி!
நாகை மாவட்டத்தில் உள்ள கோடியக்கரையில் உள்ள 18 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் மழை பெய்து வருவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படும் கடல் அலைகள்
சென்னை பட்டினப்பாக்கம், பாண்டிச்சேரியில் கடல் அலைகள் வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் எனப்படும் இந்த புயல் தற்போதைய சூழலில் நாகப்பட்டினத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் கடல் கொந்தளிப்புடன் காட்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் தேர்வுகள், கனமழையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுதேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Fengal Cyclone LIVE Update: விடாமல் விரட்டும் மழை! தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Fengal Cyclone LIVE Update: ஃபெங்கல் புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
27-11-2024: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
28-11-2024: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.