IPL 2023, DC vs CSK LIVE: சென்னை வேகத்தில் காணாமல் போன டெல்லி; 77 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி..!

IPL 2023, DC vs CSK LIVE: சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 20 May 2023 07:23 PM
IPL 2023, DC vs CSK Score: சென்னை வெற்றி..!

டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் சென்னை அணி டெல்லி அணியை 77 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ப்ளேஆஃப்க்குள் இரண்டாவது அணியாக நுழைந்துள்ளது.

IPL 2023, DC vs CSK Score: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 116 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 100 ரன்களை எட்டிய டெல்லி..!

டெல்லி அணி 12.4 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 12.4 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: துல் அவுட்..!

டேவிட் வார்னருக்கு ஒத்துழைத்து வந்த யாஷ் துல் தனது விக்கெட்டினை  ஜடேஜா பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IPL 2023, DC vs CSK Score: 10 ஓவர்களில் டெல்லி..!

10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 72 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: டேவிட் வார்னர் அரைசதம்..!

டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 32 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

IPL 2023, DC vs CSK Score: 9 ஓவர்கள் முடிவில் டெல்லி..!

9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 61 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 50 ரன்களைக் கடந்த டெல்லி..!

மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் டெல்லி அணி 8 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: தடுமாறும் டெல்லி..!

224 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள டெல்லி அணி பவர்ப்ளே முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 34 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: அடுத்தடுத்து அவுட் ஆன டூபே - கான்வே..!

போட்டியின் 18வது ஓவரின் இறுதியில் டூபேவும், 19வது ஓவரின் தொடக்கத்தில் கான்வேவும் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினர். 

Breaking News Live: பிஎஸ் 4 ரக வாகனங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

மோசடியாக பதிவுசெய்யப்பட்ட பிஎஸ் 4 ரக வாகனங்கள் மாநிலத்தில் இயக்கப்படவில்லை எனபதை உறுதிசெய்ய டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

IPL 2023, DC vs CSK Score: 150 ரன்களை எட்டிய சென்னை..!

15.1 ஓவரில் சென்னை அணி ஒரு விக்கெட்டை இழந்து 152 ரன்கள் எடுத்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 15 ஓவரில் சென்னை..!

15 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து சென்னை அணி 148 ரன்கள் சேர்த்து வழுவான நிலையில் உள்ளது.

IPL 2023, DC vs CSK Score: மிகவும் தாமதமாக கைப்பற்றப்பட்ட முதல் விக்கெட்..!

50 பந்தில் 79 ரன்கள் சேர்த்த நிலையில் ருத்ராஜ் கெய்க்வாட் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவரது விக்கெட்டை சகாரியா கைப்பற்றினார். 

IPL 2023, DC vs CSK Score: கான்வே அரைசதம்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வரும் கான்வே 33 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

IPL 2023, DC vs CSK Score: ஹாட்ரிக் சிக்ஸர் விளாசிய ருதராஜ்..!

போட்டியின் 12 ஓவரை வீசிய குல்தீப்பின் பந்துவீச்சில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அதகளப்படுத்தியுள்ளார் ருத்ராஜ். 

IPL 2023, DC vs CSK Score: சதமடித்த சென்னை..!

11.2 ஓவர்களில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 104 ரன்கள் எட்டியுள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 90களில் சென்னை..!

சிறப்பாக ஆடிவரும் சென்னையின் தொடக்க ஜோடி 11 ஓவர்களில் 97 ரன்கள் குவித்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: அட்டகாசமான அரைசதம்..!

நிதானமாக விளையாடத் தொடங்கி அதிரடிக்கு கியரை மாற்றியுள்ள ருத்ராஜ் 37 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.

IPL 2023, DC vs CSK Score: அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய ருத்ராஜ்..!

10வது ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்தில் அடுத்தடுத்து சிக்ஸர் விளாசி ருத்ராஜ் அமர்க்களப்படுத்தி வருகிறார். 

IPL 2023, DC vs CSK Score: எழுபதை எட்டிய சென்னை..!

9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 72 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: பவர்ப்ளே முடிவில் சென்னை..!

முதல் ஐந்து ஓவர்களில் அதிரடியாக ரன்கள் குவித்த சென்னை அணி பவர்ப்ளே இறுதியில் 2 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதனால் 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 50 ரன்களை தொட்ட சென்னை..!

தொடக்கம் முதல் அதிரடியாக ஆடி வரும் சென்னை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: பவர்ப்ளே பாதி முடிந்தது..!

3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023, DC vs CSK Score: 1000- வது சிக்ஸர்..!

போட்டியின் இரண்டாவது ஓவரில் கான்வே அடித்த சிக்ஸர் 3023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது சிக்ஸர் ஆகும். 

IPL 2023, DC vs CSK: டாஸ்..!

டாஸ் வென்ற சென்னை பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. 

Background

IPL 2023, DC vs CSK LIVE:


ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது முறையாக டெல்லி அணியுடன் மோதுகிறது. 


கடந்த ஒன்றரை மாத காலமாக விறுவிறுப்பாக நடந்து வந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 66 போட்டிகள் நடந்துள்ள நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு மற்ற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 


இதனிடையே இன்று நடக்கும் 67வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகின்றது. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இப்போட்டி மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது. இந்த போட்டியானது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலை செய்யப்பட்டுகிறது. 


16-வது சீசனில் நடந்தது என்ன? 


நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, முடிவில்லா ஒரு போட்டி என மொத்தம் 15 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. டெல்லி அணியோ 13 ஆட்டத்தில் விளையாடி 5 வெற்றி, 8 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது. இந்தஜ் போட்டி சென்னை அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும். அதே சமயம் தோற்றால் பிற அணிகளின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதாக இருக்கும். 


இதுவரை நேருக்கு நேர்


இரண்டு அணிகளும் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 18 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணி 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக டெல்லி - சென்னை அணிகள் இடையே நடந்த ஆட்டங்களில் சென்னை அணி 3 முறை வெற்றி பெற்றுள்ளது. மேலும் நடப்பு சீசனில் சென்னையில் நடந்த போட்டியில் சென்னை அணி டெல்லியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. ஆனால் இந்த ஆட்டத்தில் சென்னை அணி வீரர்கள் யாருமே 25 ரன்களுக்கு மேல் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு டெல்லி அணி தனது சுழற்பந்து வீச்சால் சென்னை அணியை கட்டுப்படுத்தியிருந்தது. 


உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது டெல்லி அணிக்கு சாதகமான விஷயமாகும். மேலும் கடந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு சென்னை அணியை டெல்லி பழிதீர்க்கும் என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: WWE Event In India: WWE சண்டை பிடிக்குமா? இந்தியாவில் நேரடியாக காண ஒரு வாய்ப்பு..எப்போன்னு தெரியுமா?

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.