DC vs LSG, IPL 2022 Live: டெல்லியின் வெற்றியைப் பறித்த லக்னோ.. ப்ளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது!
DC vs LSG, IPL 2022 Live: டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி வெற்றிப்பெற 18 பந்துகளில் 46 ரன்கள் அடிக்க வேண்டும்
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி, 17 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்திருக்கிறது
20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு லக்னோ அணி 195 ரன்கள் குவித்து இருக்கிறது! டெல்லி வெற்றிப்பெற 196 ரன்கள் டார்கெட்
இன்னும் 5 ஓவர்கள் மீதம் இருக்கையில், 15வது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்திருக்கிறது லக்னோ அணி
சிறப்பாக விளையாடிய கேப்டன் ராகுல், ஹூடா என இருவருமே அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளனர்.
ஷர்துல் தாகூர் வீசிய 5 வது ஓவரில் அடித்து ஆடிகொண்டிருந்த டி காக் 23 ரன்களில் அவுட்டானார்.
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 4 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி ஒரு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் 45வது ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
கடந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற்றதால் உற்சாகத்துடன் களமிறங்கும். டெல்லி அணியைப் பொறுத்தவரையில் பிரித்விஷாவும், டேவிட் வார்னரும் முக்கிய வீரர்களாக உள்ளனர். இவர்கள் இருவரும் அதிரடி தொடக்கத்தை அளித்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக அமையும். மிட்ஷெல் மார்ஷ் அதிரடியை காட்டினால் டெல்லி மிகப்பெரிய ஸ்கோரை எட்டும், கேப்டன் ரிஷப் பண்ட் அதிரடி டெல்லி அணிக்கு மிகவும் முக்கியம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -