Virat Kohli : சாப்பிடுங்க.. எஞ்சாய் பண்ணுங்க.. விராட் கோலி பகிர்ந்த க்யூட் ஃபோட்டோ..

விராட்கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அவரது சிறு வயது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement

ஆசிய கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாமல் வெளியேறினாலும், சூப்பர் 4 சுற்றின் கடைசி போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விராட்கோலி அசத்தலான சதத்தை அடித்தார். அவரது சதம் இந்திய அணிக்கும், இந்திய ரசிகர்களுக்கும் மிகுந்த உற்சாகத்தை அளித்தது.

Continues below advertisement


விராட்கோலி சதமடித்ததை சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். விராட்கோலி சதமடித்ததற்கு பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில், விராட்கோலி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சிறுவயதில் விராட்கோலி ஒரு நிகழ்ச்சியில் உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த படத்தின் இந்தி வாசகம் ஒன்றை ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார்.

விராட்கோலி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் மிகவும் பரபரப்பாக இருப்பவர். கிரிக்கெட் வீரர்களிலே இன்ஸ்டாகிராமில் அதிக பின்பற்றும் நபர்களை வைத்திருப்பவர் விராட்கோலிதான். இதனால், அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் லட்சக்கணக்கான லைக்குகள் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததையடுத்து, அவருக்கு வாழ்த்துக்களை கூறினார். வெல்டன் ஆரோன் பிஞ்ச். உங்களுக்கு எதிராக இத்தனை ஆண்டுகள் ஆடியது மிகவும் சிறப்பானது. அதுவும் ஆர்.சி.பி.யில் உங்களுடன் இணைந்து ஆடியது மிகவும் சிறப்பானது. வாழ்க்கையின் அடுத்தகட்டத்தை முழுமையாக அனுபவியுங்கள் என்று கோலி, இன்ஸ்டாகிராம் பதிவில் கருத்தாக பதிவிட்டுள்ளார்.  

மேலும் படிக்க : IND vs ENG: இங்கிலாந்து கிரிக்கெட் தொடரை வெற்றியுடன் தொடங்குமா இந்திய மகளிர் அணி ? - இன்று முதல் டி20!

மேலும் படிக்க : Kohli Fan Reaction : ”கோடி ரூபாய் கொடுத்தாலும்...” : கோலியின் ஆட்டோகிராஃப் போட்ட பேட்.. நெகிழ்ச்சி பதிலளித்த பாகிஸ்தான் ரசிகர்..

Continues below advertisement
Sponsored Links by Taboola