IndW vs EngW T20I : காமன்வெல்த் போட்டித் தொடருக்குப் பிறகு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு பயணம் செய்ததுள்ளது. கடந்த மாதம் நடந்த காமன்வெல்த் போட்டியில்  இந்திய பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்ற பிறகு இங்கிலாந்து பெண்கள் அணியுடன் டி20 கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளது. இந்திய பெண்கள் அணியை கர்மன்பீர்த் வழிநடத்துகிறார். மேலும், இந்த டி20 போட்டித் தொடர் இன்று சனிக்கிழமை தொடங்குகிறது. ராணி எலிசபெத்தின் மரணத்தால் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதே நேரத்தில், இந்திய பெண்கள் அணியின் ஓய்வு அறையில் வழக்கமாக வீராங்கனைகளை உற்சாகப்படுத்த இசைக்கப்படும் பாடல்கள் இசைக்கபடவேண்டாம் என கேட்டுக் கொண்டதற்கு இணங்க பாடல்கள் ப்ளே செய்யப்படவில்லை மேலும், பிசிசிஐ-யின் கொடி, அரை கொடி கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மேலும், போட்டியின் போது கொண்டாட்டங்களுக்கு எந்தவிதமான தடையோ விதிமுறையோ பிறப்பிக்கப்படவில்லை. 






அதேபோல், இங்கிலாந்து அணி காமன்வெல்த் போட்டியில், வெண்கலப்பதக்கத்திற்காக நடந்த பலப்பயிற்சியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. குறிப்பாக இந்த போட்டித்தொடரினை வெல்ல இங்கிலாந்து பெண்கள் அணி முழு முனைப்புடன் பயிற்சியில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 


பிரிட்டனின் புதிய மன்னராக சார்லஸ் III இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை அன்று வரலாற்றில் முதல்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் புதிய மன்னராக அவர் அறிவிக்கப்பட்டார்.


அவரின் தாயாரும் மகாராணியுமான இரண்டாம் எலிசபெத்தின் மறைவை தொடர்ந்து, சிம்மாசனம் வெல்ஸின் முன்னாள் இளவரசரான சார்லசுக்கு சென்றுள்ளது. லண்டனில் உள்ள புனித ஜேம்ஸ் மாளிகையில் பொறுப்பேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. 


தற்போதைய பிரதமர் லிஸ் டிரஸ், முன்னாள் பிரதமர்கள், சார்லஸின் மனைவி கமிலா மற்றும் அவரது மூத்த மகனும் வாரிசுமான வில்லியம், ராஜ குடும்பத்தின் ஆலோசகர்கள் உட்பட பலர் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பதவியேற்று கொண்டதையடுத்து பேசிய சார்லஸ், "இறையாண்மை மிக்க தலைவராக இருப்பதில் உள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளை எலிசபெத் ஆழமாக அறிந்திருந்தார்.


வாழ்நாள் முழுவதும் அன்பு மற்றும் தன்னலமற்ற சேவைக்கு ஒரு உதாரணமாக வாழ்ந்தவர் எலிசபெத். அதை நான் தொடர்வேன் என உறுதி அளிக்கிறேன். இறையாண்மை மிக்க நாட்டு மக்களின் பாசத்தாலும் விசுவாசத்தாலும் நான் நிலைநிறுத்தப்படுவேன் என்பதை நான் அறிவேன். என் அன்பு மனைவியின் ஆதரவால் மிகவும் ஊக்கம் பெற்றேன்" என்றார்.


இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


உலகிலேயே ராணியாக நீண்டகாலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றுள்ள ராணி எலிசபெத்துக்கு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "கடந்த 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டு எனது இங்கிலாந்து பயணத்தின்போது, ராணி இரண்டாம் எலிசபெத் உடன் நான் மறக்கமுடியாத சந்திப்புகளை மேற்கொண்டேன். 


அவரது அரவணைப்பையும் கருணையையும் என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. ஒரு சந்திப்பின் போது மகாத்மா காந்தி தன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த கைக்குட்டையை என்னிடம் காட்டினார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.


ராணி எலிசபெத்தின் மரணத்தால் போட்டி அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படாததால், போட்டி இன்று இரவு 11.30க்கு தொடங்கவிருக்கிறது.