லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா vs இங்கிலாந்து மூன்றாவது டெஸ்டின் போது ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு போட்டிக் கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நான்காவது நாளில் பென் டக்கெட்டின் விக்கெட்டைக் கொண்டாடியதற்காக சிராஜுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது, அதன் வீடியோவை இங்கே காணலாம்.
"சர்வதேச போட்டியின் போது ஒரு பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததை அடுத்து அவரை அவமதிக்கும் அல்லது ஆக்ரோஷமான செலிபிரேஷன், நடத்தை அல்லது சைகைகள்" தொடர்பான ஐ.சி.சி வீரர்கள் மற்றும் வீரர் ஆதரவு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளின் பிரிவு 2.5 ஐ மீறியதற்காக சிராஜ் மீது இந்த நடவடிக்கை என ஐ.சி.சி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முகமது சிராஜ் எதற்கா அபராதம்?
விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சிராஜ் தனது ஃபாலோ-த்ரூவில் பேட்ஸ்மேனை நோக்கிச் சென்று கொண்டாடினார், பேட்ஸ்மேன் பென் டக்கெட் பெவிலியன் நோக்கி திரும்பி நடக்கத் தொடங்கியபோது, அவர் அவரைத் எதோ வார்த்தைகளால் திட்டிக்கொண்டே. சிராஜின் தோள்பட்டை டக்கெட்டின் தோளில் இடித்தார் இது தான் அவரது அபராதத்திற்கு காரணமாக அமைந்ததுச்
ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடு புள்ளிகளைக் பெற்றால், அவை இடைநீக்கப் புள்ளிகளாக மாற்றப்பட்டு, அந்த வீரர் தடை செய்யப்படுவார்.
ஐந்தாம் நாள் ஆட்டம்:
லார்ட்ஸில் நடைபெறும் மூன்றாவது டெஸ்டின் கடைசி நாளான் இன்று. இந்தியா வெற்றி பெற இன்னும் 135 ரன்கள் தேவை என்கிற நிலையுடன் களமிறங்கியது, நான்காவது நாள் ஆட்ட முடிவில், இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரிஷப் பண்ட் 9 ரன்களுக்கும் கே.எல் ராகுல் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளனர்.