இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தன்னைப் போலவே ஒருவர் ஆள்மாறாட்டம் செய்து மும்பை லிங்கிங் பகுதியில் புமா தயாரிப்புப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார் என்று சமூக வலைதளம் மூலமாக புமாவை டேக் செய்து புகார் அளித்துள்ளார்.


ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்போர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனமான புமாவை டேக் செய்து, இன்ஸ்டாகிராமில் கோலி வெளியிட்ட பதிவில், "என்னைப் போல் ஆள்மாறாட்டம் செய்து புமா தயாரிப்புகளை மும்பை லிங்க்கிங் ரோடில் நின்று ஒரு நபர் விற்பனை செய்து வருகிறார். இது என்ன என்று பாருங்கள்?" என்று குறிப்பிட்டுள்ளார்.


கோலி பகிர்ந்த வீடியோவில், கோலியைப் போன்றே டி-சர்ட், ஷார்ட்ஸ் அணிந்து புமா ஸ்டால் முன்பு நின்று விற்பனையில் ஒரு நபர் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் அவ்வழியாக செல்பவர்கள் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு போட்டோ எடுத்துக் கொண்டும் செல்வதை வீடியோவில் காண முடிகிறது.






விராட் கோலி, கரீனா கபூர் கான், சுனில் சேத்ரி, யுவராஜ் சிங் ஆகியோரைப் போன்றே தோற்றம் கொண்டவர்களை மும்பை, டெல்லி, பெங்களூரு, குருகிராம் ஆகிய நகரங்களில் உள்ள தனது ஸ்டோரில் நிறுத்தியுள்ளது என்று கூறப்படுகிறது.


Jasprit Bumrah: வர்லாம் வர்லாம் வா... மீண்டு (ம்) வரும் பும்ரா..! தீவிர பயிற்சியில் ஈடுபடும் வைரல் வீடியோ


முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும், "என்னைப் போன்றே ஆள்மாறாட்டம் செய்து விற்பனை நடைபெறுகிறது. என்ன நடக்கிறது "புமா இந்தியா"? " என்று இன்ஸ்டாகிராமில் புமாவை நோக்கிய கேள்வி எழுப்பியுள்ளார்.