இந்தியா இங்கிலாந்துக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி நாளை ஓல்ட் டிராஃப்போர்டு மைதானத்தில் நடைப்பெற உள்ள நிலையில் 2014 ஆண்டு எம்.எஸ் தோனி இந்திய அணியின் மானத்தை காப்பாற்றிய ஒரு இன்னிங்ஸ் குறித்து காணலாம்.
இங்கிலாந்து தொடர்:
இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரில் இங்கிலாந்து அணி 2-1 என்கிற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் மற்றும் மூன்றாவது டெஸ்டில் இங்கிலாந்தும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் வெற்றிப் பெற்றது.
இந்த நிலையில் தொடரை தீர்மானிக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மான்செஸ்ர்டரில் தொடங்க உள்ளது. இதுவரை அந்த மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வென்றதில்லை. 9 போட்டிகளில் 5 தோல்வியும் நான்கு போட்டிகளில் டிராவும் செய்துள்ளது.
2014 மான்செஸ்டர் டெஸ்ட்:
இந்திய அணி இதற்கு முன்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு இங்கு விளையாடிய போது படுதோல்வி அடைந்தது. அந்த போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 54 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய பரிதாபமாக தோற்று இருந்தது. முதல் இன்னிங்ஸ்சில் 152 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸ்சில் 162 ரன்களுக்கு ஆட் அவுட்டானது.
மானத்தை காப்பாற்றிய தோனி:
இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸ்சில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் பிராட் ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 5 ஓவர்களுக்கு 8 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளுக்கு இழந்து தடுமாறியது. அப்படி ஒரு இக்கட்டான நிலையில் களமிறங்கிய கேப்டன் தோனி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். தனக்கே உரிய அதிரடி பாணியில் ஆடிய கேப்டன் தோனி ஆடத்தொடங்கினார்.
ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுப்புறம் அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தையும் எம்.எஸ் தோனி பதிவு செய்தார். தோனியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 100 ரன்களை கடந்தது. இறுதியில் 133 பந்துகளை சந்தித்த தோனி 15 பவுண்டரிகள் உட்பட 71 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 152 மட்டுமே அந்த இன்னிங்ஸ்சில் எடுத்து இருந்தாலும் தோனி அதிரடி ஆட்டம் அன்று இந்தியாவை காப்பாற்றி இருந்தது.
அந்த போட்டிக்கு பிறகு இந்திய அணி மான்செஸ்டரில் 11 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் நாளை விளையாடவுள்ளது.