ஜஸ்ப்ரீத் பும்ரா, சமீப காலமாக இந்தப் பெயரை உச்சரிக்காத இந்திய கிரிக்கெட் ரசிகர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு அவரது இடத்தை நிரப்ப யாருமே இல்லாதது போன்றே உள்ளது. ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் பும்ராவும் ஆரம்பத்தில் சேர்க்கப்பட்டிருந்தார்.


ஆனால், காயம் காரணமாக அவரால் அணியில் இடம்பெற முடியாமல் போனது. அதைத் தொடர்ந்து, அவரது இடத்திற்கு முகமது ஷமி சேர்க்கப்பட்டார். கடந்த செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடர் தான் கடைசியாக பும்ரா விளையாடிய தொடர் ஆகும்.


உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெளியேறியது. இந்நிலையில், அவர் மீண்டும் அணியில் இடம்பெறுவதற்காக தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.


28 வயதாகும் பும்ரா, தீவிப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோவை சமூக வலைதளமான ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "ஒரு போதும் ஈஸி கிடையாது. ஆனால், எப்போதும் மதிப்புள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, பும்ரா முதுகு வலியால் அவதிப்படுவதால், அவரை மருத்துவக் குழு கவனித்து வருகிறது.
ஆண்கள் டி20 போட்டிகளில் 60 போட்டிகளில் 70 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியாவின் மூன்றாவது அதிக விக்கெட் வீழ்த்தியவர் பும்ரா.






குறிப்பாக யார்க்கர் பந்து வீசும் திறமை மற்றும் துல்லியம், குறிப்பாக, டெத் ஓவர்களை சிறப்பாக கையாளும் திறமை கொண்ட பும்ரா இல்லாதது இந்தியாவுக்கு பெரிய இழப்பாக இருந்தது.






முன்னதாக, நியூசிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 ஆட்டத்தில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. தீபக் ஹூடா 4 விக்கெட்டுகளையும், சிராஜ், சஹல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களில் சுருண்டது. இந்த ஆட்டத்தில் மிகச் சிறப்பாக பந்துவீசினார் இளம் வீரர் தீபக் ஹூடா. 


Tim Southee : ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 விக்கெட்டுகளை கடந்த டிம் சவுதி; உலக சாதனை..!


இதற்கு முன்பு கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்திய பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா, டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்தில் 4 ஓவர்கள் வீசி 12 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சுருட்டியதே சாதனையாக இருந்துவந்தது. அதில் ஒரு ஓவரை மெய்டன் ஓவராகவும் பும்ரா வீசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.