மேலும் அறிய

T20 WC 2026 INDvsNAM: மிரட்டிவிட்டீங்க போங்க..! நமீபியாவை நையப்புடைத்த இந்தியா - 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

டெல்லியில் இன்று நடந்த போட்டியில் நமீபியாவை இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா- நமீபியா அணிகள் மோதின. டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் இந்த போட்டி நடந்தது. 

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 209 ரன்களை குவித்தது. 210 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணிக்கு இந்திய பந்துவீச்சாளர்கள் சவால் அளித்தனர். 

இந்தியா வெற்றி:

அந்த அணியின் லோரன், ப்ரைலிங்க், நிகோல், கேப்டன் எராஸ்மஸ் தவிர, கீரன் தவிர யாரும் இரட்டை இலக்கத்தை தொடவில்லை. இதனால், 116 ரன்களுக்கு அவர்கள் ஆல் அவுட்டானார்கள். இதனால், இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தொடக்கம் அதிரடி:

இந்திய அணி நிர்ணயித்த 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய நமீபியா அணிக்கு லோரன் - ஜேன் ப்ரைலிங்க் அதிரடி தொடக்கம் தந்தனர். சிறப்பாக ஆடிய இந்த ஜோடியை அர்ஷ்தீப்சிங் பிரித்தார். அவரது பந்தில் ஜேன் 15 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அவர் ஆட்டமிழந்த பிறகு களமிறங்கிய ஜேன் நிகோல் நிதானமாக ஆடினார். அதிரடி காட்டிய லோரனை வருண் சக்கரவர்த்தி பெவிலியனுக்கு அனுப்பினார். அவர் 20 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸருடன் 29 ரன்கள் எடுத்து அவுட்டானார். 

சீட்டுக்கட்டாய் சரிந்த விக்கெட்:

அடுத்து ஜேன் நிகோல் 13 ரன்களில் அவுட்டாக, ஸ்மித் டக் அவுட்டாக நமீபியா விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது. கேப்டன் எராஸ்மஸ் 11 பந்துகளில் 2 சிக்ஸருடன் 18 ரன்கள் எடுத்து அக்ஷர் படேல் பந்தில் அவுட்டாக, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள்.

இறுதியில் நமீபியா 18.2 ஓவர்களில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய அணிக்காக வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், ஷிவம் துபே, பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இஷான் - பாண்ட்யா அபாரம்:

முன்னதாக இந்திய அணிக்காக ஆட்டத்தை சாம்சன் - இஷான் கிஷன் தொடங்கினர். சாம்சன் மிகவும் அதிரடியாக ஆடினார். அவர் வந்தவுடன் சிக்ஸராக பறக்கவிட்டார். ஆனால், 8 பந்துகளில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதன்பின்னர், இஷான் கிஷான் வான வேடிக்கை காட்டினார். 

திலக் வர்மா 25 ரன்களிலும், கேப்டன் சூர்யா 12 ரன்களிலும் அவுட்டாக ஹர்திக் பாண்ட்யா பட்டாசாய் வெடித்தார். அபாரமாக ஆடிய இஷான் 24 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் ஆட்டமிழந்த சில நிமிடங்களில் 28 பந்துகளில் 4 பவுண்டரி 4 சிக்ஸருடன் 52 ரன்களுடன் பாண்ட்யா அவுட்டானார்.

தலைப்பு செய்திகள்

Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
Palani Land Scam: காலையிலேயே அதிரடி - பழனி நில மோசடி விவகாரம் - தலைமறைவாக இருந்த 3 பேர் கைது
TN Weather News: சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
சுட்டெரிக்கப்போகும் வெயில் - எந்தெந்த மாவட்டங்களில் மழை? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
Tamil Thai Vazhthu: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3-ம் இடமா? தவெக அரசின் நிலைப்பாடு என்ன? மார்க்சிஸ்ட் கேள்வி
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
தவெக அரசுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் 18 கோரிக்கைகள்: பழைய ஓய்வூதியம், ஊக்க ஊதியம் எப்போது?
EPS Condemn Central Minister: மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சரின் பதிலால் காவிரி நதி நீர் பாயும் மாநில மக்கள் பதற்றம் - இபிஎஸ் அறிக்கை
TVK - Congress Alliance : ‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
‘பாஜகவின் ஆபரேஷன் TC’ தவெக – காங்கிரஸ் கூட்டணியை முறிக்க பலே திட்டம்..!
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
TamilNadu Power Shutdown: தமிழகத்தில் நாளை(29-07-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
Skoda Slavia Facelift: ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டிக்கு செக்.! ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்டை இறக்கும் ஸ்கோடா; விலை, அம்சங்கள் என்ன.?
Embed widget