மேலும் அறிய

IND vs SL 2nd ODI: இந்திய அணியின் மிரட்டலான பந்துவீச்சில் சுருண்ட இலங்கை.. டார்கெட் இதுதான்?

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் , இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடி வரும் இலங்கை அணி ஏற்கனவே டி20 போட்டித் தொடரினை 2-1 என்ற கணக்கில் இழந்தது. நேற்று முன்தினம் நடந்த ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 67 ரன்கள்  வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது முன்னிலை வகிப்பதால், இரண்டாவது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற இந்திய அணி முன்னிலை காட்டி வருகிறது.

 

இந்நிலையில், போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அந்த அணியில், அவிஷ்கா மற்றும் நுவனிடு ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே சிறப்பாகவும், துல்லியமாகவும் பந்துவீசி எதிர்தரப்பினரை மிரட்டினர். இதனால், அவிஷ்கா  20 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க, தனது முதல் சர்வதேச ஒருநாள் போட்டியில் களமிறங்கிய  நுவனிடு 50 ரன்களை சேர்த்து அசத்தினர். தொடர்ந்து அவர் ரன் - அவுட் முறையில் எதிர்பராத விதமாக ஆட்டமிழந்தார். 

 

தொடர்ந்து வந்த குசால் மெண்டீஸ் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 34 ரன்கள் சேர்க்க, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் தசுன் ஷனகா வெறும் 2 ரன்களின் விக்கெட்டை பறிகொடுத்தார். கடைசி கட்டத்தில் துனித் ஓரளவிற்கு நிலைத்து நின்று 32 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

 

இதனால், 39.4 ஓவர்களில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 215 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இந்தியா தரப்பில், குல்தீப் யாதவ் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், அக்ச்சர் படேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து, 216 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கி விளையாடி வருகிறது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND vs ENG: காப்பாற்றிய டாவ்சன் - ஜோ ரூட்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா? முதல் வெற்றிக்காக ஏக்கம்!
IND Vs ENG ODI: தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI
தொடமுடியாமல் நிற்கும் ட்ராவிட் சாதனை - இங்கிலாந்தில் ரோகித், கோலி சாதிப்பார்களா? இன்று முதல் ODI

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget