SL Vs BAN LIVE Score:
SL Vs BAN LIVE Score: இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி குறித்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.
3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வெற்றி. அதன்படி, 41.1 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்து இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது.
வங்கதேச அணி 7 வது விக்கெட்டை பறிகொடுத்தது. 40.1 ஓவர்கள் முடிவில் 269 ரன்களுடன் விளையாடி வருகிறது.
6 வது விக்கெட்டை பறிகொடுத்தது வங்கதேச அணி.
35 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
ஷகிப் அல் ஹசன் மற்றும் நஜ்முல் ஹொசைன் சாண்டோ ஆகியோரை சதம் அடிக்க விடாமல் தடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார் ஏஞ்சலோ மேத்யூஸ்.
வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் அவுட் ஆனார். 65 பந்துகள் களத்தில் நின்ற அவர் 12 பவுண்டரிகள் , 2 சிக்ஸர்கள் என மொத்தம் 82 ரன்கள் எடுத்து இலங்கை அணியின் பந்து வீச்சாளர் ஏஞ்சலோ மேத்யூஸ் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
31 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து வெற்றி முனைப்பில் விளையாடி வருகிறது.
30 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
29 ஓவர்கள் முடிவில் 187 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடி வருகிறது.
சிறப்பாக விளையாடி வரும் வங்கதேச அணி 28 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
விக்கெட் எடுக்க முடியாமல் இலங்கை அணி திணறி வருகிறது. முன்னதாக கடைசியாக அந்த அணி 6 ஓவரின் 2 வது பந்தில் 2 வது விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
27 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 173 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
26 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது வங்கதேச அணி.
வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரைசதம் அடித்தார். அதன்படி 47 பந்துகளில் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்கள் எடுத்துள்ளார்.
25 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு161 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி களத்தில் நஜ்முல் ஹொசைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் ஜோடி சேர்ந்து இலங்கை அணியின் பந்து வீச்சை பொளந்து கட்டுகின்றனர்.
23 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் அரைசதம் அடிக்கும் முனைப்பில் விளையாடி வருகிறார்.
பொறுமையாக விளையாடி வரும் வங்கதேச அணி 22 ஓவர்கள் முடிவில் 140 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி களத்தில் நஜ்முல் ஹொசைன் மற்றும் ஷகிப் அல் ஹசன் நிற்கின்றனர்.
21 ஓவர்கள் முடிவில் 133 ரன்கள் எடுத்துள்ளது வங்கதேசம்.
வங்கதேச வீரர் நஜ்முல் ஹொசைன் அரைசதம் அடித்தார். அதன்படி, 58 பந்துகளில் 8 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 50 ரன்கள் எடுத்துள்ளார்.
20 ஓவர்கள் முடிந்த நிலையில் வங்கதேச அணி 123 ரன்கள் எடுத்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
18 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 108 ரன்கள் எடுத்துள்ளது.
வங்கதேச அணி வீரர் நஜ்முல் ஹொசைன் 50 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்.
வங்கதேச அணி 100 ரன்களை கடந்துள்ளது. அதன்படி, 17.1 ஓவர் முடிவில் 100 ரன்களை தொட்டது வங்கதேசம்.
17 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்களுடன் விளையாடி வருகிறது.
வங்கதேச அணி 100 ரன்களை நெருங்கி வருகிறது.
16 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 90 ரன்களுடன் விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் வங்கதேச அணி 2 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. அதன்படி களத்தில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 24* மற்றும் ஷகிப் அல் ஹசன் 20* ஆகியோர் நிற்கின்றனர்.
14 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 75 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. அதன்படி, களத்தில் நஜ்முல் ஹொசைன் சாண்டோ மற்றும் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் களத்தில் நிற்கின்றனர்.
13 ஓவரில் வங்கதேச அணி 1 ரன் மட்டுமே எடுத்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்துள்ள வங்கதேச அணி 71 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
8.3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்து அரைசதம் கடந்துள்ளது.
நிதானமாக விளையாடி வந்த தொடக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ், 23 ரன்கள் சேர்த்து மதுஷங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
6 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 41 ரன்களை சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 28 ரன்களை சேர்த்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 23 ரன்களை சேர்த்துள்ளது.
மதுஷங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் தன்ஜித் ஹாசன்.
வங்கதேச அணி முதல் ஓவரிலேயே ஒரு சிக்சர் உட்பட 10 ரன்களை சேர்த்துள்ளது.
இலங்கை அணி சார்பில் சிறப்பாக விளையாடிய அசலங்கா 108 ரன்கள் விளாசினார். வங்கதேச அணி சார்பில் ஹசன் ஷாகிப் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
49.3 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 279 ரன்களை சேர்த்து ஆல்-அவுட்டானது.
49 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 278 ரன்களை எடுத்துள்ளது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அசலங்கா 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அசலங்கா 101 பந்துகளில் 100 ரன்களை அடித்துள்ளார்.
46 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை சேர்த்துள்ளது.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீக்ஷனா 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அசலங்கா 95 பந்துகளில் 90 ரன்களை குவித்துள்ளார்.
45 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 262 ரன்களை அடித்துள்ளது.
43 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்களை சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ரன்களை சேர்த்துள்ளது.
38 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 213 ரன்களை சேர்த்துள்ளது.
நிதானமாக விளையாடி வந்த தனஞ்செய டி சில்வா 34 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் அசலங்காவுடன் கூட்டு சேர்ந்து 6வது விக்கெட்டிற்கு 78 ரன்கள் சேர்த்தார்.
37 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை எடுத்துள்ளது.
35 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 196 ரன்களை சேர்த்துள்ளது.
நிலைத்து நின்று ஆடி வரும் அசலங்கா 65 பந்துகளில் 63 ரன்களை சேர்த்துள்ளார்.
தனஞ்செய டி சில்வா - அசலங்கா கூட்டணி அரைசதம் கடந்துள்ளது.
33 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 186 ரன்களை சேர்த்துள்ளது.
30 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்களை சேர்த்துள்ளது.
விக்கெட் விழுந்த பிறகு புதியதாக களமிறங்கும் அல்லது ஏற்கனவே களத்தில் உள்ள வீரர், அடுத்த 2 நிமிடத்திற்குள் களத்திற்குள் பந்தை எதிர்கொள்ள வேண்டும். தவறினால் அவர் ஆட்டமிழந்ததாக அறிவிக்கப்படும். அந்த வகையில் சமரவிக்ரமா ஆட்டமிழந்த பிறகு, மேத்யூஸ் களமிறங்கினார். ஆனால், அவர் அணிந்து வந்த ஹெல்மெட் சரியில்லாததால், மேத்யூஸ் தனது ஹெல்மெட்டை மாற்ற முயன்றார். ஆனால், கிரீஸிற்கு வர மேத்யூஸ் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொண்டதாக வங்கதேச வீரர்கள் முறையிட, அவர் ஆட்டமிழந்ததாக நடுவர்கள் அறிவித்தனர்.
25 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்துள்ளது.
4வது விக்கெட்டிற்கு பிறகு களமிறங்கிய மேத்யூஸ் தாமதமாக மைதானத்திற்குள் வந்ததால், அவர் ஆட்டமிழந்ததாக நடுவர் அறிவித்துள்ளார்.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சமரவிக்ரமா 41 ரன்கள் சேர்த்து, ஷகிப் அல் ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
22 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 125 ரன்களை குவித்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்களை சேர்த்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 105 ரன்களை சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 96 ரன்களை சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 84 ரன்களை எடுத்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 76 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான நிசாங்கா 41 ரன்கள் சேர்த்து இருந்த போது, தன்ஜிம் சாகிப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
12 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 69 ரன்களை எடுத்துள்ளது.
குசால் மெண்டீஸ் மற்றும் நிசங்கா கூட்டணி இரண்டாவது விக்கெட்டிற்கு 61 ரன்களை சேர்த்தது.
நிதானமாக ஆடி வந்த மெண்டிஸ் 30 பந்துகளில் 19 ரன்களை சேர்த்து ஆட்டமிழந்தார்.
10 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 52 ரன்களை சேர்த்துள்ளது.
பவர்பிளேயின் 9 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 47 ரன்களை சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட்டை இழந்து 29 ரன்களை சேர்த்துள்ளது.
தொடக்க ஆட்டக்காரரான குஷால் பெரேரா வெறும் 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
2025ம் ஆண்டு நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிரபிக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது, இரு அணிகளுக்கும் அவசியமாகும்.
இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் நடப்பு உலகக் கோப்பையில் இதுவரை 7 லீக் போட்டிகளில் விளையாடி உள்ளன. இதில் இலங்கை அணி 2 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் நீடிக்க, ஒரே ஒரு வெற்றியுடன் வங்கதேச அணி 9வது இடம் வகிக்கிறது.
தன்சித் ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம், மஹ்முதுல்லா, தவ்ஹித் ஹிரிடோய், மெஹிதி ஹசன், டான்சிம் ஹசன் சாகிப், தஸ்கின் அஹ்மத், ஷோரிஃபுல் இஸ்லாம்
பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் (கேப்டன்), சதீர சமரவிக்ரம, சரித் அசலங்கா, ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீ தீக்ஷனா, துஷ்மந்த சமீரா, கசுன் ரஜீதா, தில்ஷன் மதுஷங்கா
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் நிலையில் இப்போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கிரிக்கெட்டின் திருவிழாக்களில் ஒன்றாக 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் 10 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதில் வெற்றி பெறும் 4 அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கான அணிகளும் கிட்டதட்ட முடிவாகி விட்ட நிலையில் இந்த வாரம் நடக்கும் ஆட்டங்கள் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை 37 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் வழக்கத்தை விட அனைத்து போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் வகையில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று நடக்கும் ஆட்டத்தில் வங்கதேசம் - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த 2 அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில் இப்போட்டி இந்த உலகக்கோப்பையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை.
ஆனாலும் 2025 ஆம் ஆண்டு நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கு புள்ளி பட்டியலில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே தகுதி பெற முடியும் என்பதால் அந்த வகையில் வங்கதேசம் - இலங்கை அணிகள் மோதும் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இந்த போட்டி நடக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வங்கதேசம், இலங்கை அணிகள் இடையிலான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது.
ஆனால் அங்கு காற்று மாசுபாடு கடும் மோசமாக இருப்பதால் ஏற்கனவே இரு அணிகளின் பயிற்சிகள் ரத்து செய்யப்பட்டது. சுற்றுச்சூழல் நிலவரத்தை ஐசிசி உன்னிப்பாக கவனித்து வரும் நிலையில் சூழலுக்கு தக்கபடி நடுவர்கள் முடிவெடுக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டால் வீரர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானால் நிலைமை சரியாகும் வரை ஆட்டத்தை நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் எந்த அளவுக்கு காற்று மாசுபாடு ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -