தமிழ் திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். விக்ரம்பிரபு, சிவகார்த்திகேயன், விஷால், விஜய் என தமிழின் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபல  ஹீரோயினாக உலா வருகிறார். இவருக்கும் இவரது பள்ளிகால நண்பர் ஆண்டனி தட்டிலுக்கும் கடந்த 12ம் தேதி கோவாவில் திருமணம் நடைபெற்றது.

நேரில் வாழ்த்திய விஜய்:


பெற்றோர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மத்தியில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்திற்கு நடிகர் விஜய் நேரில் சென்று வாழ்த்தினார். நடிகர் விஜய் மட்டுமின்றி த்ரிஷா, இயக்குனர் அட்லீ போன்ற திரை பிரபலங்களும் நேரில் சென்று வாழ்த்தினர்.


கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், நடிகர் விஜய் மணமக்களை வாழ்த்திய புகைப்படங்களை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். நடிகரும். தவெக தலைவருமான விஜய் மணமக்கள் கீர்த்தி சுரேஷ் – ஆண்டனி இருவரது தோளிலும் கை போட்டு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்.






மேலும், கீர்த்தி சுரேஷ்  மற்றும் ஆண்டனி இருவருக்கும் கை கொடுத்து தனது வாழ்த்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் விமானத்தில் ஒன்றாக சென்றது இணையத்தில் பெரும் பேசுபொருளானது என்பது குறிப்பிடத்தக்கது.


கீர்த்தி சுரேஷ் நடிகர் விஜய்யுடன் இணைந்து சர்க்கார், பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி கதாநாயாகியாக உலா வருகிறார்.