Breaking News LIVE: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்

Breaking News LIVE 19th Dec 2024: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

சுகுமாறன் Last Updated: 19 Dec 2024 06:39 PM
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து: இருவர் உயிரிழப்பு; சிக்கியிருக்கும் பலர்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், 5 பேர் நிலக்கரிக்குள் சிக்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


 

ராகுல் காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுப்பதாக சபாநாயகரிடம் காங்கிரஸ் புகார்

நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் ராகுல்காந்தியை பா.ஜ.க. எம்.பி.க்கள் தடுத்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் காங்கிரஸ் எம்.பி.க்கள் புகார் அளித்துள்ளனர். 

அமித்ஷாவிற்கு எதிராக தமிழ்நாட்டில் வலுக்கும் போராட்டம்

அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க., விசிக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 

அம்பேத்கர் குறித்த பேச்சு; அமித்ஷாவை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. இன்று ஆர்ப்பாட்டம்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசியதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 11.30 மணிக்கு தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் என்று அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

ஒட்டன்சத்திரம் அருகே ஜெலட்டின் குச்சிகள் வெடித்து எரிந்த கார்கள்

ஒட்டன்சத்திரம் அருகே ஜெலட்டின் குச்சிகள் வெடித்து கார்கள் எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் காலையிலே வெளுத்து வாங்கும் கனமழை

சென்னையில் இன்று காலை முதலே பல இடங்களில் மழை பெய்து வருவதால் வாகன ஓட்டிகள், பணிக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 

கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு

திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. 

ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆந்திரா நோக்கி நகர்ந்து வருகிறது. 

Background


  • ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம்;31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பில் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்பு

  • நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேதனை

  • சிறுபான்மையினருக்கு தி.மு.க. பாதுகாப்பு அரணாக இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

  • சீன வெளியுறவு அமைச்சருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் சந்திப்பு

  • சிறுத்தை நடமாட்டம் குறித்து பல முறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை – வேலூர் மக்கள் குற்றச்சாட்டு

  • திண்டுக்கல் நிதிநிறுவன அதிபர் வீடு, அலுவலகத்தில் தொடரும் வருமான வரித்துறை சோதனை

  • பஹ்ரைன் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பினர்

  • மும்பையில் பயணிகள் படகு மீது கடற்படை படகு மோதிய விபத்து – 13 பேர் உயிரிழப்பு

  • ஆந்திரா நோக்கி காற்றழுத்த தாழ்வுப்பகுதி; 6 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

  • குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி

  • நான் கிறிஸ்தவன் என்று கூறுவதில் பெருமைப்படுகிறேன் – உதயநிதி ஸ்டாலின்

  • பா.ஜ.க. பயங்கரவாதிகளுக்கு மட்டுமே எதிரி; இஸ்லாமியர்களுக்கு அல்ல – அண்ணாமலை

  • கேரள கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுவதை தடுக்க எல்லையில் 2வது நாளாக தீவிர சோதனை

  • தொடர்ந்து 3வது நாளாக சரிவைச் சந்தித்த இந்திய பங்குச்சந்தை

  • கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு சென்னை அமுதம் அங்காடியில் மளிகை விற்பனை தொடக்கம்

  • மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு எதிராக மாநிலங்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ்

  • அமலாக்கத்துறையும், வங்கிகளும் தன்னிடம் இருந்து இரண்டு மடங்கிற்கும் மேலாக கடன் வசூலித்துள்ளது அரசு – விஜய் மல்லையா

  • உலக செஸ் சாம்பியன் குகேஷூற்கு ஆரம்ப கட்டத்தில் அரசு எந்த உதவியும் செய்யவில்லை – முன்னாள் அமைச்சர் வைகைச் செல்வன் குற்றச்சாட்டு

  • கள்ளக்குறிச்சியில் கிராம நிர்வாக அலுவலரை அலுவலகத்தில் வைத்து பூட்டிய பெண் கிராம உதவியாளர்

  • ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் அஸ்வின்

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.