மேலும் அறிய

Sachin IPL Record: ஐபிஎல் தொடரையும் விட்டுவைக்காத சச்சின்.. உடைக்க முடியாத 5 சாதனைகள்

ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள இதுவரை முறியடிக்கப்படாத 5 சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ள இதுவரை முறியடிக்கப்படாத 5 சாதனைகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

50வது பிறந்தநாளை கொண்டாடும் சச்சின்:

கிரிக்கெட்டின் கடவுளான சச்சின் டெண்டுல்கர் 50 வயதை பூர்த்தி செய்துள்ளார். முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில்  சச்சின் படைத்துள்ள பல்வேறு சாதனைகள் இன்றளவும் முறியடிக்கப்படவில்லை. அதில் சில எந்நாளும் முறியடிக்க முடியாததாக உள்ளன. இதனிடையே,  தனது இறுதி கட்ட கிரிக்கெட் வாழ்வின்போது அறிமுகமான ஐபிஎல் தொடரிலும் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். அதில் சில சாதனைகள் இதுவரை முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

06. ஐபிஎல் வரலாற்றில் முதல் இந்திய வீரர்:

ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை அடித்த வீரர்களுக்கு வழங்கப்படும், ஆரஞ்சு தொப்பியை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை சச்சின் தன்னகத்தே கொண்டுள்ளார்.

05. மும்பை அணிக்காக அதிக ரன்கள்:

மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை இதுநாள் வரையில் சச்சின் பெற்றுள்ளார். கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு இறுதிபோட்டி வரை சென்ற சச்சின், அந்த ஒரே சீசனில் 618 ரன்களை விளாசினார்.

04. 35-வயதான பிறகு அதிக ரன்கள்:

சச்சின் டெண்டுல்கர் 35 வயதை பூர்த்தி செய்த பிறகு தான் ஐபிஎல் தொடர் அறிமுகமானது. ஆனால், அதன் பிறகு அந்த போட்டிகளில் விளையாடிய சச்சின் ஐபிஎல் தொடரில் 2,334 ரன்களை குவித்தார். 35 வயதுக்கு பிறகு ஐபிஎல் தொடரில் விளையாடிய எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் இத்தனை ரன்களை குவித்ததில்லை.

03. ஒரே சீசனில் அதிகமுறை அதிகபட்ச ரன்கள்

ஒரு சீசனில் நடைபெற்ற லீக் போட்டிகளில் அதிகமுறை மும்பை அணிக்காக அதிகபட்ச ரன் குவித்த வீரர் என்ற சாதனையும் சச்சினுக்கே சொந்தம். கடந்த 2010ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் மும்பை அணிக்காக சச்சின் அதிகபட்ச ரன்களை குவித்தார்.

02. ஒரே மும்பை வீரரும் சச்சின் தான்

2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணி, 5 முறை கோப்பையை வென்று இருந்தாலும், அந்த அணிக்காக ஒரு சீசனில் 600 ரன்களை விளாசிய ஒரே வீரர் சச்சின் டெண்டுல்கர் மட்டும் தான். 

01. அதிகமுறை 500 ரன்களை கடந்த வீரர்:

36 வயதான பிறகும் ஐபிஎல் தொடரில் அதிகமுறை 500 ரன்களை குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. ஐபிஎல் தொடர்களில் இதுவரை 2 முறை சச்சின் 500 ரன்களை கடந்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Ajinkya Rahane Pension: ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
ரகானேவிற்கு ரூ.70 ஆயிரம் பென்ஷன்..! அப்ப ரோகித் & கோலிக்கு எவ்வளவு கிடைக்கும்? விவரம் இதோ
Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget