Watch Video: அப்படிப்பட்ட விக்கெட் தேவையே இல்லை.! விக்கெட் கீப்பரின் கெத்து செயல்! குவியும் பாராட்டு!!
போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் ‘Spirit of the Cricket' இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. நேபால் விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷேக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது
ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், நேபால், நெதர்லாந்து கிரிக்கெட் அணிகள் சேர்ந்து டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்நிலையில், நேபால் - அயர்லாந்து அணிகள் மோதிய போட்டியில் கீழே விழுந்து எழுந்த பேட்டரை ரன் அவுட் செய்யாமல் இருந்த விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷேக்கிற்கு பாராட்டு குவிந்து வருகிறது.
ஓமன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த தொடரின் கடைசி போட்டியில் நேபாஅல் - அயர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற டாஸ் வென்ற நேபால் அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால், அயர்லாந்து அணி முதலில் களமிறங்கி பேட்டிங் செய்தது. போட்டியின் 19வது ஓவரை வீசினார் கமல். அப்போது அடெய்ர் ஸ்ட்ரைக்கிங் எண்டிலும், மெக்ப்ரைன் மற்றொரு எண்டிலும் நின்றிருந்தார். பந்தை தட்டிவிட்டு ரன் எடுக்க முற்பட்டபோது, கமலும், மெக்ப்ரைனும் மோதி கொண்டனர். இதனால், கீழே விழுந்த ப்ரைன், மீண்டும் எழுந்து ரன் எடுக்க சென்றார். அவர் க்ரீஸை அடைவதற்குள் பந்தை எடுத்த பந்துவீச்சாளர் ரன் அவுட்டாக்க்க விக்கெட் கீப்பருக்கு வீசினார்.
அப்போது யாரும் எதிர்ப்பாராத சம்பவம் ஒன்றும் அரங்கேறியது. பந்தை கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் ஆசிஃப் சேக், ப்ரைன் க்ரீஸை நோக்கி ஓடி வரும்போது அவரை ரன் அவுட் செய்யாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
வீடியோவை காண:
🏏 Spirit of cricket 🤝
— FanCode (@FanCode) February 14, 2022
Drop a ‘♥️’ below to show your appreciation for this golden gesture!
📺 Tune in to #FanCode and never miss moments like this again 👉 https://t.co/ccITeVbFiv@cricketireland @CricketNep pic.twitter.com/b4vzDyyyNU
தொடர்ந்து விளையாடிய அயர்லாந்து பேட்டர்கள், 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தனர். இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய நேபால் அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், 16 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து போட்டியை வென்றது.
நேபால் அணி, போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் ‘Spirit of the Cricket' இருப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. நேபால் விக்கெட் கீப்பர் ஆசிஃப் ஷேக்கிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்