மேலும் அறிய

IPL 2024 Auction: உலகக் கோப்பையில் அதிரடி... ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு செல்லும் வெளிநாட்டு வீரர்கள்! விவரம் இதோ!

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் 5 வெளிநாட்டு வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்

உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த வகையில் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுவதாக எதிர்பார்க்கப்படும் 5 வெளிநாட்டு வீரர்கள் பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்:

மிட்செல் ஸ்டார்க்:

ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சாளர் இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடினார். முன்னதாக, கடந்த 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இவரை 5 கோடிக்கு எடுத்தது.  அதனால், இந்த முறையும் பெங்களூரு அணிக்காக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரச்சின் ரவீந்திரா:

ரச்சின் ரவீந்திரா இந்த முறை நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் விளையாடினார். அதேபோல், உலகக் கோப்பையில் 3 சதங்களுடன் மொத்தம் 578 ரன்கள் எடுத்தார். தன்னுடைய அறிமுக உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய இவர் இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் கவனிக்கத்தக்க வீரராக இருப்பார்.

டிராவிஸ் ஹெட்:

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இரண்டு ஐபிஎல் சீசனில் விளையாடி உள்ளார். உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடினார்.  அவர் தற்போது ஆஸ்திரேலிய அணியில் நல்ல ஃபார்மில் இருப்பதால் ஐபிஎல் ஏலத்தில் எந்த அணி வேண்டுமானாலும் அதிக விலை கொடுத்து எடுக்கும்.

ஜெரால்ட் கோட்ஸி:

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரரின் ஒருவரான ஜெரால்ட் கோட்ஸி நடப்பு உலகக் கோப்பையில் சிறப்பாக விளையாடினார். உலகக் கோப்பையில் 8 போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

பந்து வீச்சு மட்டுமின்றி பேட்டிங்கிலும் தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார். இதனால், இந்த முறை நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் இவரை ஏலம் எடுப்பதில் அணிகளுக்கு இடையே போட்டா போட்டி நிலவும்.

டேரில் மிட்செல்:

நியூசிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் இந்த உலகக் கோப்பையில் 9 இன்னிங்ஸ்கள் விளையாடினார். இதில், 2 சதங்கள் 2 அரைசதங்கள் உட்பட மொத்தம் 552 ரன்களை குவித்தார். அதேபோல், அரையிறுதிப் போட்டியில் 134 ரன்களை குவித்திருந்தார்.

இதனால், இந்த முறை ஐபிஎல் ஏலத்தில் பெரும் தொகைக்கு டேரில் மிட்செல் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: Rahul Dravid: உலகக்கோப்பை இறுதிப் போட்டி தோல்வி! டிராவிட் - ரோகித்திடம் காரணம் கேட்ட பி.சி.சி.ஐ.!

மேலும் படிக்க: Virat kohli: விராட் கோலி உணவகத்தில் வேட்டியில் சென்ற தமிழருக்கு அனுமதி மறுப்பு - வேதனைப்பட்ட இளைஞர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

GK Vasan on Savukku Shankar : சவுக்கு சங்கருக்கு என்னாச்சு? விளாசும் ஜி.கே.வாசன்!Arvind Kejriwal  : ”ஸ்டாலினுக்கு சிறை! மோடியின் PLAN” கெஜ்ரிவால் பகீர் பேட்டிPriyanka Gandhi Telangana : ‘’ நான் நடந்தா அதிரடி..!’’பிரியங்கா மாஸ் எண்ட்ரி..ரேவந்த் உற்சாக வரவேற்புCSK vs GT : காப்பாற்றிய தோனி..ப்ளே ஆஃப் செல்லும் சிஎஸ்கே?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
KKR vs MI LIVE Score: கொல்கத்தா - மும்பை..மழையால் டாஸ் போடுவதில் தாமதம்!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Afghanistan: எங்கு பார்த்தாலும் மரண ஓலம்! 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - ஆப்கானிஸ்தானை உலுக்கிய கனமழை!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Career Guidance: 10ஆம் வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம்? எந்த குரூப் எடுத்தால் என்ன வேலை? ஓர் அலசல்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
ஐயப்ப பக்தர்களே.. வைகாசி மாத பூஜைக்கான சபரிமலை கோயில் நடை திறப்பு தேதி அறிவிப்பு
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
IPL 2024: சஞ்சீவ் கோயங்காவிற்கு பாடம் புகட்டிய தோனி மனைவி! தல சம்சாரம்னா சும்மாவா?
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
Vijayakanth Padma Bhushan: விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"B ஃபார் பாபு, J ஃபார் ஜெகன், P ஃபார் பவன்" ஆந்திரா பார்முலாவை கையில் எடுத்த ராகுல் காந்தி!
Cinema Headlines: ஸ்டார் பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்.. ஃபஹத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ் இயக்குநர்: சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: ஸ்டார் பட பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்.. ஃபஹத்தை புகழ்ந்து தள்ளிய பிரபல தமிழ் இயக்குநர்: சினிமா ரவுண்ட்-அப்!
Embed widget