மேலும் அறிய

IND vs SA 1ST TEST : கே.எல்.ராகுல் அபார சதம்..! முதல் இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள்..!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற விராட்கோலி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். பேட்டிங்கைத் தொடங்கிய கே.எல்.ராகுலும்- மயங்க் அகர்வாலும் ஆட்டத்தை தொடங்கினர்.

கே.எல்.ராகுல் நிதானமாக ஆட மயங்க் அகர்வால் அதிரடியாக ஆடினார். இருவரும் இணைந்து உணவு இடைவேளை வரை விக்கெட் இழப்பின்றி ஆடினர்.  சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் உணவு இடைவேளைக்கு பிறகு அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த சிறிது நேரத்தில் அவர் லுங்கி நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 123 பந்தில் 9 பவுண்டரிகளுடன் 60 ரன்களுடன் ஆட்டமிழந்தார். 

IND vs SA 1ST TEST : கே.எல்.ராகுல் அபார சதம்..! முதல் இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள்..!

அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புஜாரா களமிறங்கினார். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக ஆடாததால் இந்த தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஜாரா தான் சந்தித்த முதல் பந்திலே ஆட்டமிழந்தார். இதையடுத்து, கேப்டன் கோலி களமிறங்கினார். அவரும் கே.எல்.ராகுலும் இணைந்து மிகவும் நிதானமாக ஆடினர். இருவரும் ஏதுவான பந்துகளில் மட்டும் ரன்களை சேர்த்தனர். அவ்வப்போது பந்துகளை பவுண்டரிகளுக்கும் விரட்டினார்.

அணியின் ஸ்கோர் 199 ரன்களை எட்டியபோது கேப்டன் விராட்கோலி ஆட்டமிழந்தார். அவர் 94 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களை எடுத்தபோது லுங்கி நிகிடி பந்தில் மல்டரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து முன்னாள் துணை கேப்டன் ரஹானே களமிறங்கினார்.

IND vs SA 1ST TEST : கே.எல்.ராகுல் அபார சதம்..! முதல் இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள்..!

ரஹானே களமிறங்கிய முதல் பந்தையே பவுண்டரிக்கு விளாசினார். ரஹானே – கே.எல்.ராகுல் கூட்டணி துரிதமாக ரன்களை சேர்த்தனர். கேசவ் மகாராஜ் பந்தில் பவுண்டரி அடித்து கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். தென்னாப்பிரிக்க மண்ணில் கே.எல்.ராகுல் அடிக்கும் முதல் சதமாகும்.

IND vs SA 1ST TEST : கே.எல்.ராகுல் அபார சதம்..! முதல் இன்னிங்சில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள்..!

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்களுடன் களத்தில் உள்ளது. கே.எல்.ராகுல் 248 பந்தில் 122 ரன்களை குவித்துள்ளார். அதில் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர்களும் அடங்கும். ரஹானே 81 பந்தில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்களுடன் களத்தில் உள்ளார்.  தென்னாப்பிரிக்க அணி தரப்பில் லுங்கி  நிகிடி 17 ஓவர்களில்  4 ஓவர்களை மெய்டனாக்கி வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget