மேலும் அறிய

Watch Video: ஏஏ.. எப்புட்றா..! பாய்ந்து வந்த பந்து.. தாவிப்பிடித்த ஹர்திக் பாண்டியா..! மிரண்டு போன ரசிகர்கள்

டெவான் கான்வே அடித்த பந்தை ஹர்திக் பாண்டியா இடது கையால் தாவி பிடித்து கேட்ச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

டெவான் கான்வே அடித்த பந்தை ஹர்திக் பாண்டியா இடது கையால் தாவி பிடித்து கேட்ச் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில்  கடந்த ஜனவரி 18 ஆம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் இந்தியா- நியூசிலாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. 

மிரட்டல் பவுலிங்:

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, இந்திய அணி பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே நெருக்கடி கொடுத்தனர்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஆலன் மற்றும் கான்வே ஆகியோர் களமிறங்கினர். ஆனால், ரன் கணக்கை தொடங்கும் முன்பே, முதல் ஓவரின் 5வது பந்தில் ஆலன் போல்டாகி வெளியேறினார்.  போட்டியின் 6வது ஓவரில் நிகோலஸ் முகமது சிராஜ் வீசிய பந்தில் சுப்மன் கில்லிடன் கேட்ச் ஆகி அவுட்டாகி வெளியேறினார். அவர் 20 பந்தில் 2 ரன்கள் மட்டும் எடுத்தார்.

அசாத்திய கேட்ச்:

அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே மிட்ஷ்லெல் விக்கெட்டை முகமது ஷமி வீழ்த்தினார்.  இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா 9வது ஓவரை வீசினார். முதல் மூன்று பந்துகள் டாட் பால்களாக விழ, கான்வே நான்காவது பந்தில் ஷாட்டை விளையாட முயற்சி செய்து இடதுபுறமாக டிரைவ் செய்தார். அந்த பந்தை ஹர்தில் தாவி இடது கையால் சிறப்பான கேட்சை எடுத்தார். ஹர்திக் எடுத்த கேட்ச் எடுத்ததை கான்வேயால் நம்ப முடியாமல் நின்றார். 


இதை பிசிசிஐ தனது ட்விட்டரில் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. டெவன் கான்வேயை ஹர்திக் பாண்டியா ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 9.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்திருந்தது.   

இந்தியா வெற்றி:

தொடர்ந்து, கேப்டன் லாதம் 17 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்த நிலையில், தாகூர் பந்து வீச்சில் அவுட்டானர். இதன் மூலம், 15 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது. கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரேஸ்வெல், இன்றைய போட்டியில் 22 ரன்கள் எடுத்து இருந்த போது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது. ஆரம்பம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட, சாண்ட்னர் 27 ரன்கள் எடுத்திருந்த போது பாண்ட்யா பந்துவீச்சில் போல்ட் ஆனார்.

சாண்ட்னர் - பிலிப்ஸ் ஜோடி 7வது விக்கெட்டிற்கு 47 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் பந்துவீச்சை ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடிய பிலிப்ஸ், 36 ரன்கள் எடுத்திருந்தபோது வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் அவுட்டானார். அவரை தொடர்ந்து வந்த பெர்கூசன் மற்றும் டிக்னெர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க அந்த அணி, 34.3 ஓவர்களில், 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக, ஷமி 3 விக்கெட்டுகளையும், பாண்ட்யா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்திய அணி அபாரம்:

இதையடுத்து, 109 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் சுப்மன்கில் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பம் முதலே இருவரும் பொறுப்புடன் ஆடினர். ஒருபுறம் இளம் வீரர் சுப்மன் கில் நிதானமாக ஆட, மறுமுனையில் கேப்டன் ரோகித் சர்மா அதிரடி கட்டினார். 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 47 பந்துகளில், ஒருநாள் போட்டிகளில் தனது 48வது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இந்த ஜோடியோ இந்திய அணிக்கான வெற்றி இலக்கை அடைந்து விடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 51 ரன்கள் எடுத்து இருந்தபோது ரோகித் சர்மா ஷிப்லே பந்துவீச்சில், எல்.பி.டபள்யூ. முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். சுப்மன் கில் - ரோகித் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 72 ரன்களை சேர்த்தது.

அடுத்ததாக களமிறங்கிய கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம்,  வெறும்  20.1 ஓவர்கள் முடிவில் 111 ரன்களை சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் இந்திய அணி 2-0 என கைப்பற்றி அசத்தியது. 

தலைப்பு செய்திகள்

அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
அடி வாங்கிய ஆண்கள் அணி.. பழி தீர்த்த மகளிர் அணி! இங்கிலாந்தில் மிரட்டும் இந்திய லேடீஸ் கிரிக்கெட் அணி!
Stephen Fleming: தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
தோனியை வெச்சு காலத்தை ஓட்டுனது போதும்..! CSK கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் ராஜினாமா - அடுத்து யார்?
Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
Virat Kohli - Rohit Sharma: கிங் கோலி, ஹிட்மேன் ரோகித் இஸ் பேக்.. இந்தியாவை மீண்டும் அரியணை ஏற்றுவார்களா முன்னாள் கேப்டன்கள்?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget