IND vs ENG 3rd T20 Score Live: இங்கிலாந்து டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா

IND vs ENG 3rd T20 Score Live இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டி20 தொடர்பான உடனுக்குடன் தகவல்கள் இதோ...!

ABP NADU Last Updated: 10 Jul 2022 10:55 PM
IND vs ENG 3rd T20 Score Live: டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 20 ஓவர்களில் இந்திய அணி 198/9

20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 117 ரன்களில் ஆட்டமிழந்த சூர்யகுமார் யாதவ்

3வது டி20 போட்டியில் 55 பந்துகளில் 6 சிக்சர்கள் மற்றும் 14 பவுண்டரிகளுடன் சூர்யகுமார் யாதவ் 117 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

IND vs ENG 3rd T20 Score Live: 18 ஓவர்களின் முடிவில் இந்தியா 175/6

18 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 167/5

17 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணி வெற்றி பெற 18 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்படுகிறது.

IND vs ENG 3rd T20 Score Live: டி20யில் முதல் சதம் விளாசிய சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் 48 பந்துகளில் சதம் கடந்து அசத்தியுள்ளார்.

IND vs ENG 3rd T20 Score Live: 16 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 155/4

16 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 14 ஓவர்களின் முடிவில் இந்தியா 132/3

14 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 12 ஓவர்களின் முடிவில் இந்தியா 96/3

12 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 96 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 3rd T20 Score Live: அரைசதம் கடந்த சூர்யகுமார் யாதவ்

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 32 பந்துகளில் சூர்யகுமார் யாதவ் அரைசதம் கடந்துள்ளார்.

IND vs ENG 3rd T20 Score Live: 8 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 56/3

8 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 3rd T20 Score Live: டாப்லி பந்துவீச்சில் ஆட்டமிழந்த கேப்டன் ரோகித் சர்மா

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் டாப்லி பந்துவீச்சில் ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs ENG 3rd T20 Score Live: 11 ரன்னில் ஆட்டமிழந்த விராட் கோலி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

IND vs ENG 3rd T20 Score Live: ஒரு ரன்னில் ஆட்டமிழந்த பண்ட்

இந்திய அணியின் வீரர் ரிஷப் பண்ட் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

IND vs ENG 3rd T20 Score Live: 20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 215/7

20 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 2 பந்துகளில் 2 விக்கெட் எடுத்த ரவி பிஷ்னோய்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் 17வது ஓவரை வீசிய ரவி பிஷ்னோய் 2 பந்துகளில் 2 விக்கெட் எடுத்து அசத்தினார்.

IND vs ENG 3rd T20 Score Live: 16 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 167/3

16 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 15 ஓவர்களில் இங்கிலாந்து 150/3

15 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 13 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 125/3

13 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 12 ஓவர்களில் இங்கிலாந்து 111/3

12 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 10 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து 86/3

இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 10 ஓவர்களின் முடிவில் 86 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: 9 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 82/2

9 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் எடுத்துள்ளது. 

IND vs ENG 3rd T20 Score Live: 27 ரன்களுக்கு ஜேசன் ராய் அவுட்

இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 27 ரன்களுக்கு உம்ரான் மாலிக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IND vs ENG 3rd T20 Score Live: 5 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 43/1

5 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: பட்லர் விக்கெட்டை எடுத்த அவேஷ் கான்..

இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் விக்கெட்டை அவேஷ் கான் எடுத்துள்ளார். பட்லர் 9 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

IND vs ENG 3rd T20 Score Live: முதல் 2 ஓவர்களின் முடிவில் இங்கி..19/0

இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் 2 ஓவர்களின் முடிவில் இங்கிலாந்து அணி 19/0 எடுத்துள்ளது.

IND vs ENG 3rd T20 Score Live: இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இல்லை

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக உம்ரான் மாலிக் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IND vs ENG 3rd T20 Score Live: இங்கிலாந்து அணியின் விவரம்:

இங்கிலாந்து அணியின் விவரம்:


 





IND vs ENG 3rd T20 Score Live: 3வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் விவரம்

இந்திய அணியின் விவரம்:


 





IND vs ENG 3rd T20 Score Live: டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங்

இந்தியா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

Background

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டி20 போட்டி இன்று பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் மோத உள்ளனர். இந்த போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு மோத உள்ளனர். மொத்தம் 3 டி20 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் இரண்டு டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றியதால் இந்திய அணி நெருக்கடியின்றி ஆடும்.


அதேசமயத்தில், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுவதும் கைப்பற்றி தொடரை ஒயிட்வாஷ் செய்ய இந்தியா விரும்பும் என்பதால் இந்திய அணி இன்றைய போட்டியிலும் தனது முழுபலத்தை காட்ட விரும்பும்.


இங்கிலாந்து அணி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியை வென்ற நிலையில், அடுத்தடுத்த இரு டி20 போட்டிகளில் தோல்வியடைந்தது அந்த அணிக்கு பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற்று ஒயிட்வாஷ் ஆகும் நிலையை தவிர்க்கவே இங்கிலாந்து விரும்பும்.


இங்கிலாந்து அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் ஜேசன் ராய் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. கேப்டன் ஜோஸ் பட்லர் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் சொதப்பி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக உள்ளது. அவர் நிச்சயம் அதிரடி காட்ட வேண்டியது அவசியம். முன்னணி வீரர்கள் டேவிட் மலான், லிவிங்ஸ்டன் நிச்சயம் சிறப்பாக ஆடினால் மட்டுமே இங்கிலாந்து அணி இமாலய இலக்கை எட்ட முடியும். பந்துவீச்சிலும் இங்கிலாந்து பெரியளவில் ஆதிக்கம் செலுத்ததால் இந்திய அணியை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், அவர்கள் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம்.


இந்திய அணியைப் பொறுத்தவரையில் விராட்கோலியின் பேட்டிங்தான் மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. கேப்டன் ரோகித்சர்மா நீண்ட நேரம் களத்தில் நின்றால் இங்கிலாந்து அணிக்கு நிச்சயம் அச்சுறுத்தல் ஆகும். அவருக்கு தொடக்க வீரராக களமிறங்கும் இஷான்கிஷான் அல்லது ரிஷப்பண்ட் நல்ல ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்று நம்பலாம். ரன் மெஷின் விராட்கோலி மீண்டும் பார்முக்கு திரும்ப வேண்டியது இந்திய அணிக்கு அவசியம்.


ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கினால் இந்திய அணிக்கு மிகவும் பக்கபலமாக அமையும். கடந்த போட்டியில் கடைசி கட்டத்தில் அசத்திய ஜடேஜா இந்த போட்டியிலும் அசத்துவார்கள் என்று நம்பலாம். தினேஷ்கார்த்திக் கடந்த இரு போட்டியில் பெரியளவில் சோபிக்கவில்லை. இன்றைய போட்டியில் அசத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.


பந்துவீச்சில் கடந்த போட்டியில் அசத்திய புவனேஷ்வர்குமார், பும்ரா இந்த போட்டியிலும் அசத்தினால் இங்கிலாந்துக்கு நிச்சயம் நெருக்கடி ஏற்படும். ஹர்ஷல் படேல், ஹர்திக்கும் பந்துவீச்சில் கலக்குவார்கள் என்று நம்பலாம். இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் தீபக் ஹூடா, அக்‌ஷர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர், உம்ரான் மாலிக், ரவி பிஷ்னோய் ஆகியோரில் சிலருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.