மேலும் அறிய

IND vs AUS: ஆஸ்திரேலியாவுக்கு ஆப்பு வைக்க இவர்கள்தான் சரி.. இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவித்த பிசிசிஐ!

ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்திற்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா அணி தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வெற்றிக்கு பிறகு, இந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொள்ள இருக்கிறது. இலங்கை அணியுடன் ஒருநாள் தொடரில் பிஸியாக இருக்கும் இந்திய அணி, இந்த தொடர் முடிந்ததும் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. 

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடரானது வருகின்ற பிப்ரவரி 9 முதல் மார்ச் 13 வரை நடைபெற இருக்கிறது. 

இந்தநிலையில், ஆஸ்திரேலியா மேற்கொள்ள இருக்கும் சுற்றுப்பயணத்திற்கான 17 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மிகப்பெரிய அறிவிப்பாக வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்த இஷான் கிஷனும், இலங்கை அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் சதமடித்த சூர்யகுமார்யாதவும் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, முதுகு காயத்திலிருந்து தற்போது மீண்டு வருவதால் இந்திய அணியில் இடம்பெறவில்லை. வங்கதேச சுற்றுப்பயணத்தின் போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய ஜெய்தேவ் உனட்கட், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், முகமது ஷமி, முகமது சிராஜ் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். 

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடி ரவீந்திர ஜடேஜாவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவி அஷ்வின், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது. ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்

இந்திய அணி மீண்டும் நியூசிலாந்து சென்று சுற்றுபயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட இருக்கிறது. அதற்கான இந்திய அணியும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து தொடருக்கான இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ். அகமது, ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக்.

நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, பிரித்வி ஷா, முகேஷ் குமார். 

ஆஸ்திரேலியா டூர் ஆஃப் இந்தியா 2023: 

டெஸ்ட் தொடர்:

பிப்ரவரி 9-13: முதல் டெஸ்ட்
பிப்ரவரி 17-21: இரண்டாவது டெஸ்ட்
மார்ச் 1-5: மூன்றாவது டெஸ்ட்
மார்ச் 9-13: நான்காவது டெஸ்ட்

ஒருநாள் தொடர்:

மார்ச் 17: முதல் ஒருநாள் போட்டி
மார்ச் 19: இரண்டாவது ஒருநாள் போட்டி
மார்ச் 22: மூன்றாவது ஒருநாள் போட்டி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தரவரிசையில் ஆஸி., அணி 78.57 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. அதேசமயம் 2வது இடம் வகிக்கும் இந்திய அணி (58.93 புள்ளிகள்) வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியுடன் பங்கேற்க உள்ளது. இந்த தொடரில் 4-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றால் ஆஸ்திரேலியாவின் புள்ளி மதிப்பு 59.6 ஆக குறையும். இந்தியாவின் புள்ளி மதிப்பு  68.05 ஆக உயரும்.

இறுதிப்போட்டிக்கு செல்லுமா இந்தியா..?

அதேசமயம் இலங்கை அணி 53.33 புள்ளி மதிப்புகளுடன் 3வது  இடத்தில் உள்ளது. இந்த அணி நியூசிலாந்திற்கு எதிராக  விளையாடும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்றால்  61.11 புள்ளி மதிப்பைப் பெறும். 

4வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா  48.72 புள்ளி  மதிப்புடன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 2 போட்டியிலும் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா புள்ளி மதிப்பு 55.5 ஆக அதிகரிக்கும். இந்த அணிகளுக்கு சமமாக திகழும். 

ஒருவேளை இந்திய அணி 4 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோற்றால் அந்த அணியின் புள்ளி மதிப்பு 45.4 ஆக குறையும். ஒரு போட்டியில் மட்டும் வென்றால் 51.39 ஆகவும், இரண்டில் வெற்றி பெற்றால் 56.9 ஆகவும், மூன்று போட்டிகளில் வென்றால்  62.5 ஆகவும் புள்ளிகள் மதிப்பு இருக்கும்.  ஆனால் குறைந்தது  2 போட்டிகளில் வென்றால் மட்டுமே  இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Ajinkya Rahane: 36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
36 ரன்களுக்கு ஆல்-அவுட் - இந்தியாவை கரையேற்றி சம்பவம் செய்த கேப்டன் ரகானே - ஓய்வு அறிவிப்பு
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
IND vs ZIM: வாஷ்.. வாஷ்.. ஒயிட்வாஷ்.. ஜிம்பாப்வேயை துடைத்து வீசிய இந்தியா! கடைசி டி20யிலும் வெற்றி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
Sooryavanshi: இனி நான்தான் ஓப்பனர்.. சூறாவளி பேட்டிங்கால் சுளுக்கெடுக்கும் சூர்யவன்ஷி!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!
IND vs ZIM: கேப்டனாக முதன்முறையாக தொடரை வெல்வாரா ஸ்ரேயாஸ்? ஜிம்பாப்வேயுடன் இன்று மீண்டும் மோதல்!

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
வந்தே மாதரம் பாடல் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் தரக்கூடாது - திருமா ஏன் இப்படி கூறுகிறார்?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
Iran China US: நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
நட்பு நாட்டையே பதம் பார்த்த ஈரான்; குவைத்தில் உள்ள சீன நிறுவனம் மீது தாக்குதல்; நடந்தது என்ன.?
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
அதிர்ச்சி !! வாட்ஸ் அப் மூலம் இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி நடந்த பாலியல் தொழில்
Trump Netanyahu Plan: ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
ஈரானை போட்டுத் தாக்க 3 பிளான்கள்; ட்ரம்ப் - நெதன்யாகு ரகசிய சந்திப்பில் பேசியது என்ன.? முக்கிய தகவல்
Mahindra BE 6 New Upgrades: 3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
3 ஸ்க்ரீன்கள், புதிய டேஷ்போர்ட், கூடுதல் ஸ்டைல்; மொத்தமாக மாறும் மஹிந்திரா BE 6; என்னென்ன மாற்றங்கள்.?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
வாவ்... அமேசிங்.. வரப்போது Kia Sorento Hybrid! அப்படி என்ன வசதிகள் இருக்குது?
US Iran War: ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
ஜோர்டான் அமெரிக்க ராணுவ தளத்தை துவம்சம் செய்த ஈரான்; டென்ஷனான ட்ரம்ப்; ஏவுகணைகளால் பதிலடி
Embed widget