IND vs AFG, Asia Cup LIVE :101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா இமாலய வெற்றி..!
Asia Cup 2022 IND vs AFG LIVE Updates: இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்று அசத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணிக்கு எதிராக பேட் செய்து வரும் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முகமது நபி 7 ரன்களில் அர்ஷ்தீப்சிங் பந்தில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் அணியினர் 5 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 19 ரன்களை எடுத்துள்ளது.
புவனேஷ்வர்குமார் வீசிய முதல் ஓவரிலே ஆப்கானிஸ்தானின் ஷசாய் மற்றும் குர்பாஸ் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.
விராட்கோலியின் மிரட்டலான பேட்டிங்கால் இந்திய அணி 200 ரன்களை கடந்துள்ளது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட்கோலி தனது சதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
இந்திய அணி 17 ஓவர்களில் 162 ரன்களுடன் ஆடி வருகிறது. களத்தில் விராட்கோலி - ரிஷப்பண்ட் ஜோடி உள்ளனர்.
இந்திய அணி 15 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணிக்காக சிறப்பாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் சூர்யகுமார் யாதவ் 6 ரன்களில் போல்டாகி வெளியேறினார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடி வரும் விராட்கோலி டி20 போட்டிகளில் 32வது அரைசதத்தை விளாசியுள்ளார்.
இந்திய அணி 10 ஓவர்களில் 87 ரன்களை எடுத்துள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் - விராட்கோலி ஜோடி ஆடி வருகின்றனர்.
விராட்கோலி அளித்த கேட்ச் வாய்ப்பை ஆப்கன் வீரர் ஜட்ரான் கோட்டை விட்டதால் அந்த பந்து சிக்ஸராக மாறியது.
இந்திய அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 52 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணி 5 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 37 ரன்களை விளாசியுள்ளது.
இந்திய அணிக்காக இன்று கேப்டனாக களமிறங்கியுள்ள இந்திய கேப்டன் கே.எல்,ராகுல் இந்திய அணியின் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார்.
இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் - விராட்கோலி பேட்டிங்கைத் தொடங்கியுள்ளனர்.
இந்திய அணியில் ரோகித்சர்மா, ஹர்திக்பாண்ட்யா, சாஹல் இன்று அணியில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் இந்தியா டாசில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் பந்துவீச்சைத் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ரோகித்சர்மாவிற்கு பதிலாக இன்று கே.எல். ராகுல் கேப்டனாக பொறுப்பு வகிக்கிறார்.
இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் டி20 போட்டிக்கான டாஸ் இன்னும் சற்று நேரத்தில் போடப்பட உள்ளது.
Background
ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 போட்டியில் இந்தியா-ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது. இந்திய அணி தொடர்ச்சியாக 2 சூப்பர் 4 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பு குறைந்து இருந்தது. அத்துடன் இலங்கை மற்றும் பாகிஸ்தான் தலா 2 போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி அறுதல் வெற்றி பெற்று வெளியேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அத்துடன் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி தினேஷ் கார்த்திக், அக்சர் பட்டேல் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. இவை தவிர வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹரும் அணியில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சில தவறுகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் வீரர்கள் தேர்வு சரியாக அமையவில்லை. அத்துடன் இந்திய அணியின் வீரர்கள் போட்டியின் போது சரியாக சிங்கிள் ரன்களை இரண்டு ரன்களாக மற்றவில்லை என்ற புகாரும் உள்ளது. அத்துடன் இந்திய அணியின் ஃபீல்டிங் இந்தத் தொடரில் மிகவும் மோசமாக அமைந்தது. குறிப்பாக முக்கியமான கட்டங்களில் இந்திய அணியின் வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பி வருகின்றனர். இதுவும் அணிக்கு பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
இந்த தவறுகளை அனைத்தையும் இந்திய அணியின் வீரர்கள் டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக திருத்தி கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்தது. இதன்காரணமாக இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.
முன்னதாக இந்தியாவின் தோல்வி தொடர்பாக கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்தப் போட்டியில் முதல் 6 ஓவர்களில் சரியாக ரன்களை சேர்க்கவில்லை. அப்போது விக்கெட்களை தொடர்ந்து இழந்து கொண்டிருந்தோம். அதன்பின்னர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரன்களை சேர்க்க தவறிவிட்டோம்.
நேற்றைய போட்டியில் 10 முதல் 12 ரன்கள் குறைவாக எடுத்திருந்தோம். ஒரு சில நேரங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறுவது வழக்கம். எங்களுடைய மிடில் ஆர்டரில் ஒரு இடது கை ஆட்டக்காரர் களமிறங்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம். அதன்காரணமாக தினேஷ் கார்த்திக் வெளியே உள்ளார். இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தததால் நாங்கள் கவலைப்பட தேவையில்லை. 2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு நிறையே டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளோம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -