Virat Kohli: சாதனை மட்டும்தான் என் சிந்தனையா..? எப்போதும் அப்படி விளையாடியதில்லை.. மனம் திறந்த விராட்கோலி..!
நான் எப்போதும் சாதனைகள் குறித்த சிந்தனையுடன் களமிறங்குவதில்லை என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
நான் எப்போதும் சாதனைகள் குறித்த சிந்தனையுடன் களமிறங்குவதில்லை என இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தனது மேட்ச்-வெற்றி சதத்தைத் தொடர்ந்து, இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ் மேன் விராட் கோலி, எப்போதும் பந்துகளை எதிர்கொள்ளும் போது முடிந்தவரை அதிகபடியான ரன்களை எடுப்பதற்கான நோக்கத்துடன் பேட் செய்வதை இலக்காகக் கொண்டிருப்பதாகவும், சாதனைகளைப் படைப்பதற்கு என ஒருபோதும் பேட்டிங் செய்வதில்லை எனவும், சாதனைகளை எட்டுவதற்கு ஆசைப்படவில்லை என்றும் கூறினார். ஞாயிற்றுக்கிழமை கேரளாவில் நடந்த இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற விராட் கோலியின் சதம் உதவியது, முகமது சிராஜின் சிறப்பான பவர்பிளே ஸ்பெல், மூன்றாவது தொடர்ச்சியான ஒருநாள் போட்டியில் இலங்கையின் தோலிவிக்கு காரணமாக இருந்தது. விராட் கோலி தனது மேட்ச் வின்னிங் சதத்திற்காக 'மேட்ச் ஆஃப் தி மேட்ச்' விருதையும், இரண்டு சதங்கள் அடங்கிய தொடரில் 283 ரன்கள் எடுத்ததற்காக 'தொடர் நாயகன்' விருதையும் வென்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி கூறியதாவது, "எனக்கு எதுவும் தெரியாது (அவர் வென்றுள்ள மேன் ஆஃப் த சீரீஸ் விருதுகளைப் பற்றி கேட்கப்பட்டபோது). என்னைப் பொறுத்தவரை, இது நான் கொண்டிருக்கும் எண்ணம், நான் விளையாடும் மனநிலை ஆகியவை நான் போட்டிக்கு என்னை தாயராவதில் மிகவும் முக்கியமானதாகும். நான் எப்போதும் அணியின் வெற்றிக்கு உதவுவது, பேட் செய்வது போன்ற மனநிலையில் தான் இருக்கிறேன். முடிந்தவரை, ஒரு வீரராக அதைச் செய்தால், போட்டியில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியும். நான் எப்போதும் சரியான காரணங்களுக்காக விளையாடினேன், முடிந்தவரை அணிக்கு உதவுவதே நோக்கமாக இருக்க வேண்டும். சரியான நேரத்தில் சரியான காரணங்களுக்காக விளையாடுவதும் மிகவும் முக்கியம்" என்று விராட் ஒரு பதிவில் கூறினார்.
மேலும், அவர் கூறுகையில், "நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான் திரும்பி வந்ததிலிருந்து, நான் என்னை நன்றாக ஃபார்மில் இருப்பதாகவே உணர்கிறேன். ஒரு மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. நான் ஓய்வெடுக்கக்கூடிய காலங்களில், எனது பேட்டிங்கை ரசிக்க ஆசைப்படுகிறேன். அந்த எண்ணத்துடன் இன்றும், நான் பேட்டிங் செய்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இப்போது ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன் அதாவது ஃபார்மில் இருக்கிறேன், இது இப்படியேதொடர விரும்புகிறேன்" எனக் கூறினார்.
மேலும் அவர் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி குறித்து கூறுகையில், "ஷமி இந்திய அணிக்காக எப்போதும் இருக்கிறார், ஆனால் சிராஜின் பந்துவீச்சு விதமும் சிறப்பாக உள்ளது. பவர்பிளேயில் அவர் அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார், இது எங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு பிரச்சினையாக இருந்தது. அவர் எப்போதும் பேட்டர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துகிறார். இது நாங்கள் உலகக் கோப்பைக்கு செல்வதற்கான சிறந்த அறிகுறி" என்று ஷமி மற்றும் சிராஜ் ஆகியோரின் செயல்பாடுகளை விராட் கோலி பாராட்டினார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3-0 என தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ரன்களின் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர் மற்றும் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியைப் பதிவு செய்த முதல் அணியாகும். இந்த போட்டியில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.