மேலும் அறிய

சச்சின் மகன் அர்ஜுனின் புகைப்படத்தை வைரலாக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை..

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியல் வயாட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கரின் படத்தை வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியல் வயாட் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரரான அர்ஜுன் டெண்டுல்கரின் படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்தப் புகைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் லண்டனின் சோஹோ பகுதியில் தனது மதிய உணவை மகிழ்ச்சியாக சாப்பிடுவதாகத் தெரிகிறது. 31 வயதான டேனியல் வயாட், இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகளுள் ஒருவர். 22 வயதான அர்ஜுன் டெண்டுல்கருடன் அழகிய நட்பைக் கொண்டிருக்கும் டேனியல் வயாட் அவரோடு அடிக்கடி தென்படுவது குறிப்பிடத்தக்கது. 

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணிக்காக சுமார் 93 ஒருநாள் போட்டிகளும், 124 டி20 போட்டிகளும் விளையாடியுள்ளார் டேனியல் வயாட். லண்டனின் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் எம்.சி.சி கிரிக்கெட் அகாடமியின் அர்ஜுன் டெண்டுல்கர் பயிற்சிக்கு வரும் போது அவருடன் பழகியுள்ளார் டேனியல் வயாட். கடந்த 2007ஆம் ஆண்டு, 10 வயதான அர்ஜுன் டெண்டுல்கருக்கு பந்து வீசிய போது இந்த நட்பு தொடங்கியுள்ளது. 

சச்சின் மகன் அர்ஜுனின் புகைப்படத்தை வைரலாக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை..

இதுகுறித்து பேசிய டேனியல் வயாட், `நான் முதலில் சச்சின், அர்ஜுன் ஆகிய இருவரையும் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் சந்தித்தேன். அது 2009 அல்லது 2010ஆக இருக்கலாம். நான் அப்போது எம்.சி.சி இளம் வீரர்களுடன் இருந்த போது, அவர்கள் இருவரும் நெட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது நான் அவர்களிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அப்போது அர்ஜுனுக்கு 10 வயது இருக்கலாம். இந்தப் படம் கூகுளில் இருக்கிறது. அப்போது நான் அர்ஜுனுக்கு பந்து வீசிய போது, அவர் நன்றாக விளையாடினார். அதனைத் தொடர்ந்து, நான் சச்சினையோ, அர்ஜுனையோ காணும் போதும், அவர்கள் இருவரும் லார்ட்ஸ் மைதானத்திற்கு வரும் போதும், நான் அவர்களிடம் சென்று விளையாடுவேன்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து அவர், `அர்ஜுன் தற்போது மிக வேகமாக பந்து வீசுகிறார். எப்போது பந்துவீச்சில் உன் தலையைப் பறக்க வைத்துவிடுவேன் என நக்கலாகக் கூறுவார். அதனால் அர்ஜுன் எனக்கு பந்து வீசுவது இப்போதெல்லாம் எனக்கு சரியாக வருவதில்லை. அவரது பந்துகளை எதிர்கொள்வது சற்றே ஆபத்தாக மாறிவிட்டது. மேலும், அவர்களின் குடும்பம் அழகானது. அர்ஜுனின் அம்மாவும் அற்புதமான நபர். சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பைப் போட்டிகளின் போது சச்சினைச் சந்தித்தேன்.. அவர்களை எப்போது பார்த்தாலும் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும்’ எனவும் தெரிவித்துள்ளார். 

சச்சின் மகன் அர்ஜுனின் புகைப்படத்தை வைரலாக்கிய இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனை..

டேனியல் வயாட் இந்திய ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் நன்கு பரிச்சயமானவர். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி மீதான தனது ஈர்ப்பு குறித்து ஏற்கனவே பேசியுள்ள டேனியல் வயாட், இந்திய அணியின் பௌலர் யுஸ்வேந்திர சஹாலுடன் சமூக வலைத்தளங்களில் கிண்டலாக சண்டையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
CM Vijay: பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
பீச்சோரம் வீட்டருகிலேயே புதிய தலைமை செயலகம் - ப்ளான் சொன்ன CM விஜய்? களமிறங்கிய அதிகாரிகள்?
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
திரிஷா அக்காவை யார் தவறா பேசினாலும் விட மாட்டோம்.! ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக கொந்தளித்த ரசிகர் மன்றம்
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
Nainar Nagendran: தமிழ் மொழியை விட மதம் பெரியதா? - மரிய வில்சனை வெளுத்து வாங்கிய நயினார்!
RBI Loan Recovery: லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
லோன் வசூல் நடவடிக்கைகள் - கடும் கட்டுப்பாடுகளை விதித்த ஆர்பிஐ - புதிய விதிகள் என்ன?
Embed widget