மேலும் அறிய

IND Vs Pak: நெருப்பாய் களம் காணும் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள்.. கிரிக்கெட் வரலாற்றில் சாதித்தது என்ன?

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள, மறக்க முடியாத சாதனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டிகள் மூலம் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை நிகழ்த்தப்பட்டுள்ள, மறக்க முடியாத சாதனைகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

இந்தியா Vs பாகிஸ்தான்:

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடரின் மூன்றாவது லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ளன.  2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு, முதன்முறையாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இதுவரைஇ இந்த இரு அணிகள் இடையேயான கிரிக்கெட் மோதல்கள் தொடர்பான சில சுவாரஸ்ய தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

முதல் போட்டி - முதல் தொடர்:

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான முதல் கிரிக்கெட் போட்டி, 1952ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி நடைபெற்ற டெஸ்ட் போட்டி தான். கிரிக்கெட் உலகில் ரைவல்ரி எனப்படும் இரு அணிகளுக்கு இடையேயான மோதலில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தியா - பாகிஸ்தான் மோதல் அன்று தான் தொடங்கியது. இதே நாளில் தான் சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டியில் விளையாடும் அணியாக பாகிஸ்தான் உருவெடுத்தது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் டெல்லியில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி பதிலடி கொடுத்தது. மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அடுத்த இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தன. இதனால், 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-1 என கைப்பற்றியது.  

வரவேற்பும், அரசியலும்:

தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி இருந்தாலும் இருநாடுகளின் வீரர்களும் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் எல்லை தாண்டி கொண்டாடப்பட்டனர்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் முன்னெடுத்த அரசியல் நடவடிக்கையால் தான், 1987ம் ஆண்டு முதன்முறையாக இங்கிலாந்து  அல்லாத நாட்டில் உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது.

மோதல்களும் - முடிவும்:

20 ஆம் நூற்றாண்டில் இரு நாடுகளுக்கு இடையே போட்டிகளின் போது பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. ​​​​அம்பயர்கள் சொந்த அணிக்கு சாதகமாக செயல்பட்டது, சூதாட்டம் என பல்வேறு புகார்கள் எழுந்தன. இருநாடுகளுக்கு இடையேயான நிலையற்ற உறவுகளால் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் தொடரும் பாதிக்கப்பட்டது. 1998க்கும் 2008க்கும் இடைப்பட்ட பத்தாண்டுகளில் இரு அணிகளும் 14 டெஸ்ட் போட்டிகளில் மோதின. ஆனால்,  2008ம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இருநாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி என்பது இதுவரை நடைபெறவில்லை.  2012/13 இல் மூன்று போட்டிகள் கொண்ட ODI மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட T20I தொடருக்காக பாகிஸ்தான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அதுவே இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி இருதரப்பு போட்டியாக உள்ளது.

எகிறும் எதிர்பார்ப்பு:

அதன்பிறகு, இரு அணிகளும் ஐசிசி போட்டிகளிலும், ஆசிய கோப்பையிலும் மட்டுமே எதிர்த்து விளையாடி வருகின்றன. அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளால் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நாடுகளாக அல்லாமல் எதிரி நாடுகளாக பார்க்கப்பட்டன. நாடுகளுக்கு இடையேயான இந்த மோதலை களத்தில் வீரர்களின் ஆக்ரோஷத்தில் காண முடிந்தது. அது ரசிகர்களிடையேயும் தொற்றிக்கொள்ள இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி என்றாலே அது பெரும் போராக பார்க்கப்படுகிறது. இந்த இருநாடுகளுக்கு இடையேயான போட்டியை இந்தியா - பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்களே ஆவலுடன் எதிர்நோக்கி பார்க்கின்றனர். அந்த போட்டி தொடர்பான வணிகமும் விண்ணை முட்டும் அளவிற்கு உள்ளது. உதாரணமாக, 2019 உலகக் கோப்பை tஹொடர் முழுவதும் 706 மில்லியன் பார்வையாளர்களை ஐசிசி பெற்றது இதில் 273 மில்லியன் பார்வயாளர்கள் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆதிக்கம்:

2010 முதல் 2020 வரை இரு அணிகளும் விளையாடிய 14 ஆட்டங்களில் இந்தியா 10-ல் வெற்றி பெற்றது. இருப்பினும் இதுவரை மொத்தமாக நடைபெற்ற 136 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் 73 போட்டிகளிலும்,  இந்தியா 55 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 2013-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற 17 இருதரப்பு ஒருநாள் தொடர்களில் பாகிஸ்தான் 11 தொடரகளையும் இந்தியா ஐந்து தொடர்களையும் வென்றது. டி20 போட்டிகளில் 12 முறை நேருக்கு நேர் மோதியதில் ஒன்பதில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 58 டெஸ்ட் போட்டிகளில், 38 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. அதேநேரம்,  பாகிஸ்தான் 11 போட்டிகளிலும், இந்தியா 9 போட்டிகளிலும் வென்றுள்ளன. இரு தரப்புக்கும் இடையே டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா 4 தொடர்களை வெல்ல,  ஏழு டிராவில் முடிந்துள்ளன.

சச்சின் சாதனை:

இரு அணிகளுக்கிடையேயான ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில், 67 இன்னிங்ஸ்களில் 2526 ரன்கள் சேர்த்து சச்சின் முதலிடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் 64 இன்னிங்ஸ்களில் 2403 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். பந்துவீச்சில் அதிகபட்சமாக வாசிம் அக்ரம் 60 விக்கெட்டுகளையும்,  அனில் கும்ப்ளே 54 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக  ஜாவேத் மியான்தத் 2228 ரன்களையும், இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் 2089 ரன்களையும் சேர்த்துள்ளனர். அதிக விக்கெட்டுகளில் கபில்தேவ் (29), இம்ரான் கான் (23) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். டி20 போட்டிகளில், விராட் கோலி 488 ரன்களுடன் அதிக ரன் குவித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

KPY Bala on Marriage | ”காலைல 4:30க்கு கல்யாணம்! தேதி பின்னர் அறிவிக்கப்படும்” பாலா நச் பதில்Savukku Shankar Goondas | சவுக்கு மீது குண்டாஸ்! சென்னை காவல்துறை அதிரடி! வச்சு செய்யும் வழக்குகள்Modi's Mother Heeraben patel | ”அம்மா PHOTO-அ கொடுங்க” பரிசுடன் வந்த இளைஞர்கள்! கலங்கிய மோடிSavukku Shankar asset |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
RCB vs DC Match Highlights: கெத்து! DC -யை வீழ்த்தி ப்ளே ஆப் வாய்ப்பை தக்கவைத்த RCB!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
Virat Kohli: விராட் கோலிக்கு இது தேவையா? இஷாந்த் சர்மாவிடம் சொன்னதும் நடந்ததும் இதுவா? வைரலாகும் வீடியோ!
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம்! இந்து கோயிலுக்கு தானமாக வழங்கிய இஸ்லாமியர்கள் - காஷ்மீரில் நெகிழ்ச்சி
Fact Check: ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
ராகுல் காந்தியை புகழ்ந்தாரா பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி? உண்மையில் நடந்தது என்ன?
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Black Hole: கருந்துளை மேலே நாம் பறந்தால் எப்படி இருக்கும்? நாசா வீடியோ வெளியீடு
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
Ravindra Jadeja: விதிகளை மீறிய ஜடேஜா..மூன்றாவது நடுவர் கொடுத்த ஷாக்!
"எம்.ஜி.ஆர். மாதிரி இருக்க நினைக்கிறார்! நடிகர் விஜய் கட்சி தொடங்கியது மகிழ்ச்சி" முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ
"அவரோட வயச விட கம்மியான தொகுதிகளில்தான் காங்கிரஸ் வெற்றிபெறும்" ராகுல் காந்தியை கலாய்த்த பிரதமர் மோடி!
Embed widget