மேலும் அறிய

அடி சக்க! சென்னையில் நடக்கப்போகுதா BBL லீக் கிரிக்கெட்? சேப்பாக்கம் வந்த ஆஸ்திரேலியா நிர்வாகிகள்!

ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற BBL லீக் கிரிக்கெட் தொடரை சென்னை சேப்பாக்கத்தில் நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் நடத்தப்படுவது போல, ஆஸ்திரேலியாவில் நடத்தப்படும் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் பிக்பாஸ் லீக். ஐபிஎல் நடத்தப்படுவதற்கு முன்பிருந்தே இந்த தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 

பிக்பாஸ் லீக்:

உலகில் அதிகளவு கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடு இந்தியா. ஐபிஎல் தொடருக்கு பிறகு டி20 போட்டிகளுக்கான கிரிக்கெட் ரசிகர்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளனர். இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு கிடைக்கும் வருவாயைப் போல மற்ற டி20 லீக் தொடர்களுக்கு கிடைப்பதில்லை.

இந்த நிலையில், ஆஸ்திரேலியாவில் பிரபலமான பிக்பாஸ் லீக் கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்காக, ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகத்தைச் சேர்ந்த ரிச்சர்ட் ஆஸ்ட்ரோஃப் மற்றும் பிக்பாஸ் லீக் நிர்வாகத்தைச் சேர்ந்த பில் ரிக்பி மற்றும் மார்கோட் ஹார்லி இந்தியா வந்துள்ளனர். 

BBL சென்னையிலா?

இவர்கள் பிக்பாஸ் லீக் கிரிக்கெட்டை குறிப்பாக சென்னையில் நடத்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை வந்த அவர்கள்  சேப்பாக்கத்தில் அமைந்துள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். இதற்காக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடனும் நேரில் ஆலோசனை நடத்தினர். 

தற்போது வரை சென்னையில் பிக்பாஸ் லீக் போட்டிகளை நடத்த அதிகாரப்பூர்வமாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. இந்தியாவில் அதிகளவு ரசிகர்கள் கூட்டம் மைதானங்களில் குவிவதால், ரசிகர்கள் வருகை அதிகளவு உள்ள மைதானங்களைத் தேர்வு செய்து பிக்பாஸ் தொடரின் சில போட்டிகளை இங்கு நடத்த அவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். 

சாதகங்கள், பாதகங்கள்:

தற்போது நடந்து முடிந்துள்ள ஆலோசனை மட்டுமின்றி இங்குள்ள பாதுகாப்பு வசதிகள், டிக்கெட் விற்பனை, போட்டி நடத்துவதில் உள்ள சாதகங்கள், பாதகங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பிக்பாஸ் லீக் தொடரை இந்தியாவில் நடத்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் சென்று ரசிப்பார்கள் என்பது உண்மை. ஆனால், ஐபிஎல் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியே ஆகும்.

ஏனென்றால், இந்திய அணிக்காக ஆடும் வீரர் ஒருவர் வெளிநாடுகளில் நடத்தப்படும் டி20 லீக் தொடரில் ஆட அனுமதி கிடையாது. அவ்வாறு அவர் ஆட வேண்டும் என்றால் இந்திய அணி மற்றும் ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்ற பிறகு விளையாடலாம். 

வெற்றி பெறுமா?

தற்போது புகழ்பெற்ற இந்திய வீரர்கள் யாரும் பிக்பாஸ் லீக் தொடரில் விளையாடாத நிலையில், இந்தியாவில் இந்த தொடரை நடத்துவதால் பலன் அளிக்குமா? என்பது சந்தேகமே. அதேசமயம், ஐபிஎல் தொடரில் ஆடி பிரபலமான வெளிநாட்டு வீரர்கள் மற்றும் புகழ்பெற்ற வெளிநாட்டு வீரர்கள் இந்த பிக்பாஸ் லீக் தொடரில் ஆடுவதால் அவர்களைப் பார்ப்பதற்காக கூட்டம் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. 

 

தலைப்பு செய்திகள்

Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Watch Video: ஃபயர் மோடில் டிஎஸ்பி சிராஜ் பேட்டிங்.. ஹாட்ரிக் சிக்ஸர்.. கொண்டாடும் ரசிகர்கள்!
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!
உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்: புதுச்சேரி அணியில் களம் இறங்கும் பஞ்சாப் கிங்ஸ் துணை கேப்டன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
ரூ.20 லட்சத்துக்குள் சிறந்த 7 சீட்டர் கார்கள்: பெரிய குடும்பத்திற்கு எது பெஸ்ட்?
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
CM Vijay : ‘போலீஸ் சீருடையில் வந்த சிறுவன்’ உடனே முதல்வர் விஜய் செய்த செயல்..!
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Strong SUV கார் வாங்கணுமா? மஹிந்திரா Scorpio-வா Thar Roxx-ஆ? டிசைன், மைலேஜ், விலை- முழு ஒப்பீடு
Donald Trump: கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
கேட்டரிங் வாகனம், மிலிட்டரி விமானம் - துருக்கியில் ஈரான் அச்சுறுத்தலில் இருந்து ட்ரம்ப் தப்பியது எப்படி?
Embed widget