மேலும் அறிய

Mohammad Siraj : வார்த்தைகளால் லிட்டனை சீண்டிய சிராஜ்… அடுத்த பந்திலேயே போல்டான லிட்டன்! அப்படி என்ன சொன்னார்?

சிராஜ் அவரிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு அவர் சிராஜை சீண்டுவது போல கையை காதில் வைத்து சைகைகள் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பங்களாதேஷின் லிட்டன் தாஸிடம் சென்று சில வார்த்தைகளைக் கூறி வம்பிழுத்த பிறகு அடுத்த பந்திலேயே அவரது விக்கெட்டை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் முகமது சிராஜ் என்ன கூறினார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

லிட்டன்-சிராஜ் வாக்குவாதம்

பங்களாதேஷுக்கு எதிரான சட்டோகிராம் டெஸ்டின் இரண்டாவது நாளில் இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாட்டால், தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே இந்திய அணி ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் குல்தீப் யாதவின் வலுவான கீழ்-வரிசை பேட்டிங்கால் 400 ரன்களை தொட்டு பந்தி வீச வந்ததும், முதல் பந்திலேயே முகமது சிராஜ் விக்கெட் எடுத்து கொடுத்து இந்திய அணிக்கு சாதகமாக ஆட்டத்தை திரும்பினார். அவரது பந்து வீச்சில் டாப் ஆர்டர் நிலை குலைய, லிட்டன் தாஸ் மட்டும் அதிரடியாக சில ஷாட்களை அடித்தார். அப்போது சிராஜ் அவரிடம் ஏதோ சொல்ல, பதிலுக்கு அவர் சிராஜை சீண்டுவது போல கையை காதில் வைத்து சைகைகள் செய்ய, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு சிராஜே அவரது விக்கெட்டை அடுத்த ஓவரிலேயே எடுக்க விராட் கோலி அதே போல காதில் கை வைத்து சைகை செய்து கேலி செய்ய ஆட்டத்தில் அனல் பறந்தது. 

Mohammad Siraj : வார்த்தைகளால் லிட்டனை சீண்டிய சிராஜ்… அடுத்த பந்திலேயே போல்டான லிட்டன்! அப்படி என்ன சொன்னார்?

விராட் கோலி பதிலடி

டெஸ்ட் போட்டி என்றாலே விராட் கோலியின் அக்ரசிவ் கொஞ்சம் தூக்கலாக இருக்கும். அதிலும் எதிரணியினர் இப்படி செய்யும்போது இறங்கி அடிப்பார். ஆனால் அதற்கு முன் சிராஜ் லிட்டன் தாஸுடன் வாய் வார்த்தையில் ஈடுபட்ட நிலையில் அப்போது என்ன பேசினார்கள் என்பதை இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் பின் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். மொஹமட் சிராஜ் நஜ்முல் ஹொசைன் சாண்டோவை கோல்டன் டக் செய்து அனுப்பிய பின்னர், வலுவான பதிலடி கொடுப்பதற்காக களமிறங்கிய பங்களாதேஷின் நம்பிக்கை இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிதைந்தது.

தொடர்புடைய செய்திகள்: வாள்.. லிவ்-இன் உறவு.. துண்டாய் வெட்டப்பட்ட காதலி..கேரளாவில் ஒரு டெல்லி சம்பவம்.. பதறவைத்த கொடூரம்

லிட்டன் வெளியேற்றம்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் பங்களாதேஷ் பேட்ஸ்மேன்களின் பொறுமையை சோதித்தார். அப்போது சிராஜின் அசுரத்தனமான பந்தை பங்களதேஷின் லிட்டன் தாஸ் தடுத்து ஆட, அவரிடம் சென்று சிராஜ் ஏதோ வார்த்தைகளை கூறினார். அடுத்த பந்தை வீச சிராஜ் தனது ரன்-அப்பை நோக்கிச் சென்றபோது லிட்டன் அவரிடம் ஏதோ பதில் கூற சண்டை செய்வது போல முன்னே செல்ல, பின்னர் அது நடுவரால் தடுத்து நிறுத்தப்பட்டது. சிராஜ் அடுத்த பந்திலேயே லிட்டனை வெளியேற்றினார். அந்த விக்கெட்டை விராட் கோலியும், சிராஜும் கொண்டாடி தீர்த்தனர். அப்போது லிட்டன் செய்தது போல சைகை செய்த விராட் கோலியின் புகைப்படங்கள் வைரல் ஆகின. 

Mohammad Siraj : வார்த்தைகளால் லிட்டனை சீண்டிய சிராஜ்… அடுத்த பந்திலேயே போல்டான லிட்டன்! அப்படி என்ன சொன்னார்?

என்ன கூறினார் சிராஜ்?

இது நடப்பதற்கு முன் சிராஜ் அவரிடம் பேசியது குறித்து கூறுகையில் "எதுவும் இல்லை, 'இது டி20 அல்ல, இது டெஸ்ட் கிரிக்கெட். புத்திசாலித்தனமான கிரிக்கெட்டை விளையாடு'ன்னு சொன்னேன்", என்றார். வங்காளதேசம் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 133/8 என்று முடிக்க, இன்று காலை மீண்டும் போட்டி துவங்கியதும் 17 ரன்களில் மீதமிருந்த 2 விக்கெட்டுகளையும் விட்டு 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் இன்றோடு சேர்த்து இன்னும் மூன்று நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது. குல்தீப் யாதவ் மூன்றாவது நாளின் தொடக்கத்தில், சட்டோகிராமில் உள்ள ஜாஹுர் அகமது சௌத்ரி ஸ்டேடியத்தில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் ஆகியுள்ளார். அதுமட்டுமின்றி வெறும் 8 டெஸ்ட் போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ள அவர் இந்தியா, பங்களாதேஷ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய அணி தொடக்க வீரர்களாக கில் மற்றும் ராகுல் இரண்டாவது இன்னிங்சில்  களம் இறங்கி நிதானமாக விளையாடி வருகின்றனர்.

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
ஜெயிச்சும் சுப்மன் கில் அப்செட்? - நியூசிலாந்துக்கு எதிரான த்ரில் வெற்றிக்குப் பின் நடந்தது என்ன?
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
IND vs NZ: ஆரம்பமே அமர்க்களம்.. அசத்தல் பவுலிங்குடன் தொடங்கிய இந்தியா! தடுமாறும் நியூசிலாந்து!
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
Shami Retire: டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு குட்பை! ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! ரசிகர்கள் வேதனை
IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!
IND vs NZ: பந்து வீச்சில் மிரட்டிய ஜேக்கப் டஃபி.. அடுத்தடுத்து வெளியேறிய வீரர்கள்.. விராட் கோலி அரைசதத்தால் இந்தியா வெற்றி!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
TN Weather Update: தீபாவளி கொண்டாடுன மாதிரிதான்..! காலை முதல் வெளுத்து வாங்கும் மழை! 27 மாவட்டங்களில் இன்னைக்கு இப்படித்தான்!
Diwali 2026 Wishes:
"வெறும் 'ஹேப்பி தீபாவளி' போரடிக்குதா? - இதோ சில டிஃபரண்டான வாழ்த்துச் செய்திகள்!" பிடிச்சவங்களுக்கு உடனே அனுப்புங்க அன்பை பெறுங்க
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
பெரியார் அறிவுலக விவகாரம்: குற்றச்சாட்டுகளுக்கு நடுவே லஞ்ச ஒழிப்புத் துறையை நாடிய திமுக
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Scene Box Office: ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர்! சீன் காட்டும் சீன்.. சூர்யா ரசிகர்கள் ஹாப்பி மோட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Rasi Palan: நவம்பர் 8 தீபாவளி ராசிபலன்... இன்று அதிர்ஷ்டம் அடிக்கப்போகும் ராசிகள் எவை? இதோ லிஸ்ட்!
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
Tata EV Car Offers: 3.35 லட்சம் ரூபாய் தள்ளுபடி... Tata மின்சார கார்களுக்கு தாறுமாறு தள்ளுபடி! எந்த காருக்கு எவ்ளோ?
“கேமரா முன்னாடி கையசைச்சா மட்டும் போதாது” - பெரியார் அறிவுலக விவகாரத்தில் தவெக அரசை விளாசிய எடப்பாடி

Embed widget