மேலும் அறிய

David Warner: ”எனக்கு ஒரு ஆசை இருக்கு; ஆனால் எனது மனைவி என்ன சொல்வார் எனத் தெரியவில்லை" - டேவிட் வார்னர்

David Warner: தனது ஓய்வுக்குப் பின்னர் டேவிட் வார்னர் அடுத்து என்ன செய்யப்போகின்றார் என பேசியுள்ளது தற்போது கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்துள்ளது.

கிரிக்கெட் உலகில் தற்போது ரசிகர்கள் மத்தியில் உரையாடலுக்கு ஆளாகியுள்ள கிரிக்கெட் வீரர் என்றால் அது ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர்  சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதுதான். அண்மையில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் டேவிட் வார்னர். இதனால் தற்போது கிரிக்கெட் உலகில் இவரது அடுத்த நடவடிக்கை என்னவாகும் இருக்கும் என்பதுதான் பேச்சாக மாறியுள்ளது. 

இதுதொடர்பாக பேசியுள்ள டேவிட் வார்னர், ”நான் பின்னர் பயிற்சியாளராக வேண்டும் என யோசித்து வருகின்றேன். சில காலத்திற்கு நான் பயிற்சியாளராக செயலாற்ற எனக்கு அனுமதி கிடைக்குமா என்று முதலில் எனது மனைவியுடன் பேச வேண்டும். அண்மை காலங்களில் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் மிகவும் ஆக்ரோசமாக நிகழும் வம்பிழுக்கும் செயல்கள் குறைந்து வருகின்ற்து.  ஐபிஎல், பிபிஎல் உள்ளிட்ட டி20 லீக் தொடர்களில் விளையாடும்போது சர்வதேச போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் போட்டியாளர்களுடன் உடை மாற்றும் அறைகளை பகிர்ந்து கொள்வதால் இனி ஆடுகளத்தில் வீரர்களுக்கு மத்தியில் ஆக்ரோசமாக வம்பிழுக்கும் செயல் என்பது வரும் காலங்களில் இல்லாமல் போகும். 

David Warner: ”எனக்கு ஒரு ஆசை இருக்கு; ஆனால் எனது மனைவி என்ன சொல்வார் எனத் தெரியவில்லை

கடந்த காலங்களில் இருந்ததைப் போல் இனி மிகவும் ஆக்ரோசமான ஸ்லெட்ஜிங்கையோ அல்லது அதுபோன்ற எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்று நான் நினைக்கவில்லை. ஆனாலும் அதன் அளவு பெருமளவு குறைந்து அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக இருக்காது என நான் நம்புகின்றேன். குறிப்பாக நடந்து முடிந்த பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையிலான தொடரில் நானும் ஷாஹீன் ஷா அப்ரிடியும்  சிரித்துக்கொண்டதைப் போன்று கொஞ்சம் கேலி, விளையாட்டு  நிறைந்ததாக இருக்கும்.  நான் ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கின்றேன் என்றால் அது லீக் கிரிக்கெட்டில் விளையாடும் அணிக்கோ அல்லது சர்வதேச அணிக்கோ எந்தவகை அணிக்கு நான் பயிற்சியாளராக இருந்தால் வீரர்களிடம் வம்பிழுக்கும் திட்டம் இருந்தால் அதனை செய்யக்கூடாது என கூறுவதுடன் அதனை இல்லாமலும் மாற்றுவேன்” எனக் கூறியுள்ளார்.

David Warner: ”எனக்கு ஒரு ஆசை இருக்கு; ஆனால் எனது மனைவி என்ன சொல்வார் எனத் தெரியவில்லைவார்னர் குறிப்பிடும் விளையாட்டின்போது வீரர்களை வம்பிழுப்பது என்பதில் கைதேர்ந்த அணி என்றால் அதனை கிரிக்கெட் உலகம் குறித்து நன்கு தெரிந்த அனைவரும் ஆஸ்திரேலியா என கண்ணை மூடிக்கொண்டு சொல்வார்கள். பொத்தாம் பொதுவாக ஆஸ்திரேலியா அணியின் மீது இந்த குற்றச்சாட்டினை நாம் முன்வைக்கவில்லை. எதிர் அணியில் இருக்கும் வீரர்களை கோபத்திற்கு உள்ளாக்கி அவர்களுக்கு விளையாட்டின்மீது இருக்கும் கவனத்தினை சிதறடித்து உணர்ச்சிவசப்படச் செய்து போட்டியின் முடிவினை தங்களுக்கு சாதகமாக மாற்ற அணியாகவும் தனித்தனி வீரராகவும் செயல்பட்ட வரலாறு ஆஸ்திரேலியா அணிக்கு உள்ளது. இதனை மனதில் வைத்துத்தான் டேவிட் வார்னர் இதுபோன்ற கருத்தைக் கூறியுள்ளார் என கிரிக்கெட் உலகில் பேச்சுக்கள் அடிபடுகின்றது. 

தலைப்பு செய்திகள்

Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget