Asia Cup 2025 IND vs PAK: ”எங்க கிட்ட வேணாம் தம்பி” மோசமான சைகை காட்டிய பாகிஸ்தான் வீரர்! வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்!
ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியின் போது சர்ச்சைக்குரிய வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் சைகை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

Asia Cup 2025 IND vs PAK: ஆசிய கோப்பை இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியின் போது சர்ச்சைக்குரிய வகையில் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் சைகை காட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
Asia Cup 2025 IND vs PAK ஆசிய கோப்பை போட்டி:
ஐக்கிய அரசு அமீரகத்தில் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குரூப் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் தற்போத சூப்பர் 4 ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில், நேற்று(செப்டம்பர் 21) நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
மோசமான சைகை செய்த பாகிஸ்தான் வீரர்:
இந்த நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் இந்திய ரசிகர்களை பார்த்து ஆத்திரம் மூட்டும் சைகையை காண்பித்தது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது விமானம் கீழே விழுவது போன்ற சைகையை தான் ஹாரிஸ் ராவூப் செய்துள்ளார்.
Haris Rauf never disappoints, specially with 6-0. pic.twitter.com/vsfKKt1SPZ
— Ihtisham Ul Haq (@iihtishamm) September 21, 2025
இந்தியா பாகிஸ்தான் இடையே அண்மையில் நடைபெற்ற ஆப்ரேஷன் சிந்தூரின் போது 6 இந்திய போர் விமானங்களை சூட்டு வீழ்த்தியதாக தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் ஆதரப்பூர்வமற்ற தகவல்களை பரப்பி வருகிறது. அதன் ஒரு பகுதியாகத்தான் அது போன்ற ஒரு சைகையை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூப் செய்துகாட்டியது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. இவரது இந்த செயல்பாட்டுக்கு சமூக வலைதளங்களில் இந்திய ரசிகர்கள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனார்.
He just got a Brahmos dropped near his house. 😏 pic.twitter.com/Xyn518laQ6
— Prasad K (Modi ka Parivar) (@koranne_p) September 21, 2025
வறுத்தெடுக்கும் இந்திய ரசிகர்கள்:
விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இது போன மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுவதை பாகிஸ்தான் வீரர்கள் முதலில் நிறுத்த வேண்டும் என்றும் பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல பாகிஸ்தான் அணிக்கு இந்தியா தக்கபதிலடி கொடுத்துள்ளது என்றும் கருத்து கூறி வருகின்றனர் இந்திய ரசிகர்கள்.



















