மேலும் அறிய

வடலூரில் 155வது தைப்பூச ஜோதி தரிசனம்: ஏழு திரை நீக்கி, பக்தர்களின் பரவசம்!

வடலூர் வள்ளலார் 155 ஆவது ஜோதி தரிசனத் திருவிழா.. ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை என சன்மார்க்க அன்பர்கள் முழக்கமிட்டு ஜோதி தரிசனம்.

வடலூர் 155 வது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவை முன்னிட்டு ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர் ராமலிங்க அடிகளார். இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகுக்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 

 வள்ளலார், ஏழை எளிய மக்களின் பசியைப் போக்க, சத்திய ஞான சபையில் தர்மசாலையை நிறுவினார். அன்று முதல் இன்றுவரை அணையா அடுப்பு எரிந்து பசிப்பிணி நீக்கிவருகிறது.

 வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 155ஆம் ஆண்டு தைப்பூசப் பெருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளன்று, சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படுவது வழக்கம். 

பொதுவாக தைமாசம் தவிர்த்த பிற மாத பூசநட்சத்திர தினத்தில் ஆறு திரைகள் மட்டுமே நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். தைப்பூசத்தன்று ஏழு திரைகளையும் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். காலை 6 மணி 10 மணி நண்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை அதிகாலை ஐந்து முப்பது மணி என ஆறு காலங்களில் ஜோதி தரிசனத்தை காணும் பக்தர்கள் அருட்பெரும் ஜோதி தனிப்பெருங்கருணை என கோஷத்துடன்  தரிசனம் செய்தனர்.

கருப்புத்திரை, நீலத்திரை, பச்சைத்திரை, சிவப்புத்திரை, பொன்மைத்திரை, வெண்மைத்திரை, கலப்புத்திரை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வடலூர் வள்ளலார் சத்திய ஞான  சபை ஜோதி தரிசன விழாவை ஒட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 14 துணை காவல் கண்காணிப்பாளர்கள், 50 ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள்,ஆயுதப்படை மற்றும் ஊர்க்காவல் படை என 1700 போலீசார் பாதுகாப்பு பணியிலும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் 100 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் மேலும் கூட்ட நெரிசலை  தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள மாமிசம் மற்றும் மதுபான கடைகள் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
திருவையாறில் அப்பர் கயிலைக் காட்சி விழா: பக்தர்கள் வெள்ளத்தில் திளைத்த ஐயாறப்பர் திருத்தலம்
"அங்காளம்மா தாயே... அருள் புரிவாயே!" - ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம்... மேல்மலையனூரில் விண்ணதிர முழங்கிய பக்தி கோஷம்!
"காசியை விட புனிதம்" - ஆனால் சொட்டு நீர் இல்லை... மயிலாடுதுறை துலா கட்டத்தில் சோகமான ஆடி அமாவாசை!
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்
முன்னோர்களை நினைத்து வழிபடும் புனித நாள்... ஆடி அமாவாசை: திருவையாறில் குவிந்த மக்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget