தேனி மாவட்டம் வீரபாண்டியில் பிரசித்தி பெற்ற கெளமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 9-ந்தேதி தொடங்கியது. வருகிற 16-ந்தேதி வரை திருவிழா நடைபெறும். இவ்விழாவில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி, ஆயிரங்கண் பானை எடுத்தும், அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். அதன்படி, விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம்  நடந்தது. திருத்தேரோட்டத்தை காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.


Karnataka Election Results 2023 LIVE: கொண்டாட்டத்தில் காங்கிரஸ்! அப்செட்டில் பாஜக! கர்நாடகா வாக்கு எண்ணிக்கை தகவல்கள் உடனுக்குடன்..!




அவர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் நூற்றுக்கணக்கான திருநங்கைகளும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து  நேற்று மாலை 6 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி யாழி பூஜை மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன. பின்னர் கெளமாரியம்மன் உற்சவசிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. தேருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ சிலை அமர்த்தப்பட்டது. பின்னர் தேரோட்டம் நடந்தது.


Karnataka Election Result: ‘எப்படியாவது காப்பாத்திடு ஆண்டவா’ - கோயிலில் சிறப்பு வழிபாடு செய்த பசவராஜ் பொம்மை..!




மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.  ஓம் சக்தி பராசக்தி என்று கோஷம் எழுப்பியபடி தேரை பக்தர்கள் இழுத்து சென்றனர்.  பின்னர் மூலவர் சன்னதிக்கு எதிராக தேர் நிலை நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேரை பக்தர்கள்  வணங்கினர். 


karnataka Election 2023: பாஜகவுக்கு சவுக்கு அடி... இவ்வளவு அதிருப்தியா? கர்நாடக தேர்தலில் 8 அமைச்சர்கள் பின்னடைவு!





Karnataka Election 2023: முந்துகிறதா காங்கிரஸ்? டெல்லி அலுவலகத்தில் தொடங்கிய கொண்டாட்டம்: மேளதாளத்துடன் ஆரவாரம்!


தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே பார்வையிட்டனர். மூலவர் சன்னதியில் நிறுத்தப்பட்ட தேர் நாளை மறுநாள் திங்கட்கிழமை ரதவீதிகளில் சுற்றி வந்து நிலைக்கு வருகிறது. தொடர்ந்து 17-ந் தேதி ஊர் பொங்கல் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண