கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளதால், டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தை தொடங்கியுள்ளனர். முதல் சுற்று வாக்கு எண்ணும் பணியில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலை பெற்று வருகிறது. இருப்பினும் வெற்றி தங்களுக்கே என்ற நம்பிக்கையுடன், காங்கிரஸ் தொண்டர்கள் டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இசை வாத்தியங்களை வாசித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.