பழனியில் வருகின்ற 18-ஆம் தேதி நடைபெறும் போகர் ஜெயந்தி விழாவிற்கு திருக்கோவில் நிர்வாகம் தடை விதித்தது. இதனை தொடர்ந்து போகர் ஜெயந்தி விழா கொண்டாட நீதிமன்றத்தை நாடினர் சிவாந்த புலிப்பாணி சுவாமிகள். இதனை தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை போகர் ஜெயந்தி விழா நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவிக்கும் விதமாக  சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


MI vs GT, IPL 2023 LIVE: குஜராத் பந்து வீச்சுக்கு பதிலடி கொடுக்குமா மும்பை இந்தியன்ஸ்.. டாஸ் வென்ற ஹர்திக் பந்து வீச முடிவு..!

Palani temple: பழனி முருகன் கோயிலில் போகர் ஜெயந்தி விழாவுக்கு அனுமதி -  மதுரை உயர் நீதிமன்றத்திற்கு புலிப்பாணி சுவாமிகள் நன்றி


பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலைக்கோவிலில் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. வருகின்ற 18ஆம் தேதி நடைபெற இருந்த போகர் ஜெயந்தி விழாவை பழனி திருக்கோவில் நிர்வாகம் தடை விதிப்பதாக தடை ஆனை பிறப்பித்து இருந்த நிலையில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தது, இவ்வழக்கை விசாரணை செய்த டி.ஆர்.சுவாமி நாதன் , ஸ்ரீமதி நீதிபதிகள் கொண்ட அமர்வு பழனி  கோவிலில் புலிப்பாணி ஆசிரமம் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் இணை ஆணையர் மே 2 ம் தேதி தடை விதித்துள்ளனர்.


IPL Suresh Raina: "நான் மட்டும் டீம் செலக்ட்டரா இருந்தா இப்பவே இதை செய்திருப்பேன்" - மிஸ்டர் ஐபிஎல் சொன்னது என்ன?


இது சட்டத்திற்கு புறம்பானது எனவும் பழனி கோவிலில் போகர் சன்னதி தொன்று தொட்டு புலிப்பாணி பாத்திர சுவாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.  கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்திய வீடியோ ஆதாரம் உள்ளது, எனவே போகர் ஜெயந்தி விழாவை கடந்த ஆண்டு போல நடத்த அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவினை விசாரித்த நீதிபதிகள்  இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்து நீதிபதியும் பிறப்பித்த உத்தரவு வருகின்ற மே 18 ஆம் தேதி புலிப்பாணி பாத்திர ஸ்வாமிகள் சார்பில் காலை 11 மணி முதல் நண்பகல் இரண்டு மணி வரை போகர் ஜெயந்தி விழா முறைப்படி நடத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.


School Teachers dismiss: 36 ஆயிரம் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் டிஸ்மிஸ்...கொல்கத்தா உயர் நீதிமன்றம் எடுத்த அதிரடி நடவடிக்கை...காரணம் என்ன?




இந்நிலையில் புலிப்பாணி சுவாமிகள் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது போகர் ஜெயந்தி விழா 18ஆம் தேதி நடைபெற அனுமதி அளித்து மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டுள்ளதை வரவேற்பு தெரிவித்துள்ளார். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் எனவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை சுட்டி காட்டி தெரிவித்து ளளார். மேலும் தமிழக அரசுக்கும் , காவல் துறைக்கும் ,பத்திரிக்கையாளர்களும் ,வருவாய்துறைக்கும் நன்றி தெரிவித்தார் ,மேலும் 17 ம் நடைபெறும் சிறப்பு யாகத்தில் ஜப்பான் நாட்டில் இருந்து பலர் கலந்து உள்ளனர் என தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண