கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பாஜக அறுதிப்பெரும்பான்மையோடு வெற்றி பெறும் என்று பாஜக முதலமைச்சர் வேட்பாளர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். 


கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே 10 ஆம் தேதி நடைபெற்றது. மொத்தம் 2615 வேட்பாளர்கள் களத்தில் உள்ள இந்த தேர்தலில் வாக்கு எண்ணிக்கையானது இன்று நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நீடித்தது. 


தென்னிந்தியாவில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா என்பதால் இந்த தேர்தல் முடிவுகளை ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கிறது.  இதனிடையே ஷிவ்கான் தொகுதியில் கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கும், காங்கிரஸ் வேட்பாளர் யாசிர் அகமது கான் பதானுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.  கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸின் சையது அசீம்பீர் காத்ரியை விட  49.5 சதவீத வாக்குகள் அதிகம் பெற்று பசவராஜ் பொம்மை பெற்றிருந்தார். 


இந்நிலையில் ”கர்நாடகா சட்டப்பேர்வை தேர்தலில் பாஜக பெரும்பான்மையோடு வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார். ”மக்களின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதால் கர்நாடகாவுக்கு இன்று முக்கியமான நாள்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு அன்று ஹூப்பள்ளியில் உள்ள அனுமன் கோவிலில் வாக்குப்பதிவு அன்று பிரார்த்தனை செய்த பசவராஜ் பொம்மை, இன்றும் தேர்தலில் பாஜக வெற்றிப் பெற வேண்டி வழிபாடு மேற்கொண்டார். 


ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரிய அளவில் பின்னடைவை அளித்துள்ளது. பாஜக 70க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் பெரும்பான்மை இல்லாத நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்ற பாஜகவின் கனவு தவிடுபொடியாகி விட்டது. முதல்வர் பசவராஜ் பொம்மை காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் இந்த தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சரி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: Karnataka Election Result: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை..! கர்நாடகாவில் வெற்றிக்கனியை பறிக்கப்போவது யார்?