ராயனூர் அருள்மிகு ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழா பக்தர்கள் பரவசத்துடன் அக்னி சட்டி, அழகு குத்தி, பால்குடம் எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


 




கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாமில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்படி முத்துமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் , அக்னி சட்டி ,அழகு குத்திக்கொண்டு ஆட்டம், பாட்டத்துடன் திருமாநிலையூர் பகுதி வழியாக ராயனூர் முகாமை வந்தடைந்தனர். 


 




 


அதைத் தொடர்ந்து பக்தர்கள் கொண்டு வந்த பால் குடம் தீர்த்தத்தால் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சுவாமிகளுக்கும் வேம்பு மரத்திற்கும் அபிஷேகம் நடைபெற்று தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது.


ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெற்று வரும் திருவிழாவில் முக்கிய நிகழ்வாக அமராவதி ஆற்றில் இருந்து அக்னி சட்டி ,அழகு குத்துதல் ,பால்குடம் நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 




 


இதை தொடர்ந்து இன்று இரவு திருவிளக்கு பூஜை மற்றும் மாவிளக்கு பூஜையும் நாளை இரவு சுவாமி திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாட்டை ராயனூர் இலங்கை மறுவாழ்வு முகாம் பொது மக்கள் சார்பாக சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண