மேலும் அறிய

Thai Amavasai 2025: தை அமாவாசை எப்போது? முக்கியத்துவம் என்ன? விவரம் இதோ!

Thai Amavasai 2025 Date and Time: தை அமாவாசை எப்போ வருகிறது, எந்த நேரத்தில் தர்பணம் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட தகவலை இங்கே காணலாம்.

பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள தை மாதத்தில் வரும் அமாவாசை (Thai Amavasai) முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 2025-ம் ஆண்டில் தை அமாவாசை எப்போது வருகிறது, சிறப்புகள் என்ன, ஏன் முக்கியமானது ஆகியவற்றை பற்றி காணலாம்.  

தை அமாவாசை 2025:

 முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. திதி கொடுக்கும் வழக்கம் இருப்பவர்களுக்கு தை அமாவாசை முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. 

தை அமாவாசை எப்போது? | Thai Amavasai 2025 Date and Time

2025- ம் ஆண்டு தை அமாவாசை 29-ம் தேதி புதன்கிழமை அன்று வருகிறது. 

  • தை அமாவாசை - 29.01.2025 - புதன்கிழை
  • அமாவாசை திதி தொடங்கும் நேரம் - 28.01.2025 செவ்வாய் கிழமை இரவு 7:35 முதல் 
  • அமாவாசை திதி முடியும் நேரம் - 29.01.2025 - புதன்கிழமை -மாலை 06.05 வரை 

தர்பணம் கொடுக்கும் நேரம் என்ன?

சூரிய உதயத்தின்போது இருக்கும் திதி, நட்சத்திரன் அன்றைய நாளுக்கானதாக கருதப்படும். அதன்படு, 29-ம் தேதி தை அமாவாசை. அன்றைய தினம் திருவோணம் நட்சத்திரமும் இணைந்தே அமைந்துள்ளது. அன்று புதன்கிழமை என்பதால் காலை 07.30 முதல் 9 மணி வரையிலான நேரம் எமகண்டமாகவும், பகல் 12 முதல் 01.30 வரையிலான நேரத்தில் ராகு காலமும் உள்ளது. அதனால் இந்த நேரங்களை தவிர்த்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறப்பு. பொதுவாக தர்ப்பணம் கொடுப்பவர்கள் உச்சி காலத்திற்கு முன்பாக தர்ப்பணம் கொடுத்து வேண்டும் என ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தை அமாவாசை நாளில்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடைந்து அவர்களின் ஆசீர்வாதம் முழுமையாக கிடைக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இதுவே பலரின் நம்பிக்கையாக இருக்கிறது. 

மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும். ஆண்டு முழுவதும் வரும் 12 அமாவாசைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும் என்று சொல்லப்படுகிறது. 

தை அமாவாசையன்று அன்று முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள், தர்ப்பணம் வழங்குவார்கள். அதுவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டாலும், தை அமாவாசையில் தான் முன்னோர்களின் இறப்பிற்கு பிறகான வாழ்க்கை நல்லப்படியாக இருக்கவும் பூவுலகில் உயிர் வாழ்பவர்களுக்கு அவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. ஆடி அமாவாசை நாளில் பூமிக்கு வரும் நம் முன்னோர்கள் தை அம்மாவாசை அன்று  மீண்டும் அவர்கள் உலகத்திற்கு செல்வதாக சொல்லப்படுகிறது. சூரியன் சந்திரன் இருவரும் ஒரே நேர்கோட்டில் ஒன்றை ஒன்று சந்தித்தபடி ஒரே வீட்டில் பயணிப்பதாக சொல்லப்படுகிறது.   

தை அமாவாசை தர்பணம், விரதம்:

தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விரதம் இருப்பது, புனித ஆறுகளில் நீராடுவது, கோயில்களில் வழிபாடு செய்வது, விளக்கேற்றுவது என முன்னோர்களின் நினைவாக அவர்களுக்கு உங்கள் அன்பை, மரியாதையை வெளிப்படுத்துவதுபோல வழிபாடுகளை செய்யலாம். 
.


 

Freelancer Jhansi Rani. MA
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
இப்படியொரு தெய்வீகக் காட்சியைப் பார்த்திருக்க மாட்டீர்கள்! மாயூரநாதர் கோயில் முருகர்-தெய்வானை திருக்கல்யாணம்!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
உலக அமைதி வேண்டி சிறப்பு துஆ: மதுரையில் தியாகத்திருநாள் பக்ரித் தொழுகை எழுச்சியுடன் நடைபெற்றது!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
குரு-சீடர் உறவின் உன்னத விழா! தருமபுரம் ஆதீனத்தில் களைகட்டும் வைகாசிப் பெருவிழா - ஜூன் 7-ல் பட்டினப் பிரவேசம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்: கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்: கோவில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றம்!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Toyota Urban Cruiser Ebella: எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
எபெல்லா வந்தாச்சு..! இ-விட்டாரா தாங்குமா? டொயோட்டா EV-யின் விலை, அம்சங்கள், வசதிகள்
Minister Ramesh: திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
திருச்செந்தூரில் அடாவடி..! அமைச்சரிடமே ரூ.4000 லஞ்சம் வாங்கிய அர்ச்சகர்கள் - கொத்தாக சிக்கிய கும்பல்
Tata Tiago Petrol Vs CNG: வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
வரிசைகட்டிய புதிய டாடா டியாகோ கார்கள்; சிறந்த தேர்வு பெட்ரோலா.? சிஎன்ஜி-ஆ.? வாங்க பார்க்கலாம்
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Minister Ramesh: சாமி கும்பிடுவதில் சிரமம்.. பக்தர்கள் நடத்தப்படும் விதத்தில் அதிருப்தி! அமைச்சர் ரமேஷ் உடனடியாக சரி செய்வாரா?
Krish & Aish Youtube: “சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
“சார், ஆபாசமா வீடியோ போட்றாங்க, புடிச்சு உள்ள போடுங்க“; யூடியூபர்கள் கிருஷ்-ஐஷ்வர்யா மீது புகார்
Embed widget