Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! எத்தனை மணிக்கு விளக்கு ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்கு ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீப நன்னாளில் எத்தனை மணிக்கு விளக்குகள் ஏற்ற வேண்டும்? எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்? என்று கீழே விரிவாக காணலாம்.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஆன்மீக மனம் நிறைந்த மாதம் கார்த்திகை மாதம் ஆகும். கார்த்திகை மாதம் என்றாலே அனைவரது நினைவுக்கும் முதலில் வருவது கார்த்திகை தீபம் ஆகும்.
விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஆணவத்தைப் போக்குவதற்காக சிவ பெருமான் ஜோதி வடிவில் காட்சி தந்ததையே கார்த்திகை தீபமாக கொண்டாடி வருகிறோம்.
கார்த்திகை தீபம் எப்போது?
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரமும், பெளர்ணமி இணைந்து வரும் நாளே கார்த்திகை தீபமாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான கார்த்திகை தீபம் அடுத்த வாரம் செவ்வாய் கிழமை ( நவம்பர் 24ம் தேதி) கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை மாதம் பிறந்தது முதலே கார்த்திகை தீபத் திருநாள் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. திருவண்ணாமலையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
விளக்குகள் எப்போது ஏற்ற வேண்டும்?
கார்த்திகை தீபத் திருநாள் என்றாலே வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றி சாமி தரிசனம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
திருவண்ணாமலையில் விளக்கு ஏற்றுவதைப் பொறுத்தே பக்தர்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றுவது வழக்கம். திருவண்ணாமலையில் பரணி தீபம் அதிகாலை 4 மணிக்கு ஏற்படுகிறது. மகாதீபம் மாலை 6 மணிக்கு ஏற்படுகிறது.
திருவண்ணாமலை மலையில் மகாதீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்ட பிறகு பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளில் விளக்குகளை ஏற்றுவது சிறப்பாகும். அதற்கு முன்னதாக, மாலையிலே வீட்டைச் சுத்தம் செய்து வாசலில் கோலமிட்டு சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். முதல் நாளே வீட்டை கழுவி நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
எத்தனை விளக்குகள் ஏற்ற வேண்டும்?
காலையிலே எழுந்து குளித்து நீராடி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம். பக்தர்கள் வீடுகளில் தங்கள் வீட்டு தலைவாசல், ஜன்னல், மாடங்களில் விளக்குகளை ஏற்ற வேண்டும். வீடுகளில் குறைந்தபட்சமாக 27 விளக்குகள் ஏற்ற வேண்டும். அதிகபட்சமாக 50 அல்லது 100 விளக்குகள் வரை என எத்தனை விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்.
வாசலின் தீபத்தை முன்னிட்டு போடப்படும் கோலத்தின் மையத்திலும் விளக்குகள் வைப்பது சிறப்பாகும். முடிந்தவரை அகல்விளக்குகளாக விளக்குகள் ஏற்றுவது சிறப்பாகும். முடிந்தவரை வீட்டில் விளக்குகள் 30 நிமிடங்கள் வரை விளக்குகள் ஏற்றுவது சிறப்பாகும். அகல் விளக்குகள் இல்லாவிட்டால் வண்ண மெழுகுவர்த்திகளை ஏற்றிக் கொள்வது சிறப்பாகும்.
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாட்டின் அனைத்து கோயில்களிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலை உள்பட பக்தர்கள் அதிகளவு குவியும் கோயில்களிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















