மேலும் அறிய

Parvathamalai: பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்.. என்னென்ன மாற்றங்கள் வருகிறது - முழு விவரம் இதோ

Parvathamalai Timings: ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவண்ணாமலை பர்வதமலை கோயிலுக்கு கட்டண வசூல் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது

பர்வதமலை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மகாதேவ மங்கலம் பகுதியில் 4,560 அடி உயர பர்வதமலை மீது, உலக பிரசித்தி பெற்ற பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகா அர்ஜூனேஸ்வரர் கோயில் உள்ளது. மலையின் உச்சியில் உள்ள கோயிலை, 3 ஆம் நூற்றாண்டில் நன்னன் எனும் குறுநில மன்னன் கட்டியதாகக் கூறப்படுகிறது. 

சிறப்பு வாய்ந்த கோயில்

பர்வதமலைக்கு தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரம், கர்நாடகா, தெலங்கானா மற்றும் வெளிநாடு என பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி, அமாவாசை தினங்களில் மலையேறி தங்கள் கைகளாலேயே தாங்கள் கொண்டு செல்லும் பொருட்களை கொண்டு சிவனிற்கு அபிஷேகம் செய்து வழிபாடு மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகிறது. பருவதமலை கோயிலுக்கு, விடுமுறை நாட்களில் ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று நீண்டநேரம் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து நாளுக்கு நாள் பர்வத மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. படிக்கட்டுகள், பாறைகள், செங்குத்தான ஏணிப்படி, ஆகாயப்படி என கடுமையான பாதைகளை கடந்து தான் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பதால், இளைஞர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பர்வதமலைக்கு அதிக அளவு இளைஞர்கள் வருவதும் குறிப்பிடத்தக்கது.

கட்டண வசூல்

பர்வதமலை ஏறும் பக்தர்கள் மலையை முறையாக பராமரிக்காமல், குப்பைகளை வீசிவிட்டு செல்வதும் பிளாஸ்டிக் கழிவுகளை மலைமீது விட்டு செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. தொடர்ந்து பர்வதமலை தூய்மை இல்லாமல் இருந்து வருவதால், சூழியல் ஆர்வலர்களும் மற்றும் வனத்துறை அலுவலர்களை கவலை அடைய செய்துள்ளது. இதுவரை பர்வதமலைக்கு வருவதற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை, சார்பில் பர்வதமலை மலை ஏறுவதற்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. புதுப்பாளையம் வனச்சரகம் சார்பில் சூழல் மேம்பாட்டு கட்டணம் என்ற பெயரில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குக் கட்டணம் கிடையாது.

மேலும் பர்வத மலையைச் சுற்றி உள்ள தென்மகாதேவமங்கலம், கடலாடி, பட்டியந்தல், வீரளூர், சீனந்தல், கெங்கலமகாதேவி, நல்லான் பிள்ளைபெற்றாள், அருணகிரி மங்கலம், கோயில் மாதிமங்கலம் ஆகிய வருவாய் கிராமங்களில் வசிப்பவர்களுக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

கட்டுப்பாடுகள் என்ன ?

மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி பர்வத மலை மீது ஏற புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகாலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவர். மற்ற நேரங்களில் மலையேறும் பாதை மூடப்பட உள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தலைப்பு செய்திகள்

கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
கோயில் தூண்களை தொட்டு வணங்குவது ஏன்? தெய்வீக மற்றும் அறிவியல் பின்னணி!
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
ஆனி, ஆடி மாதங்களில் புது வீட்டிற்கு குடியேறலாமா? பால் காய்ச்சலாமா?  உண்மை காரணம் என்ன?
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
கிரக தோஷங்கள் நீங்கும் பரிகாரத் தலம்! 1008 வைணவர்களுக்குத் ததி ஆராதனை செய்த பூமியில் நடைபெற்ற வீர நரசிம்ம பெருமாள் திருத்தேரோட்டம்.
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்! செவ்வாய்க்கிழமை நடந்த அதிசயம் என்ன?

வீடியோ

Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Morning Breakfast Scheme: ’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
’’முதல்வரின் காலை உணவுத் திட்டம்’’ பெயரை மாற்றிய தவெக அரசு; என்ன பெயர், காரணம்?
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
ஒரு துளித் துணிச்சல் கூட இல்ல.. 'டம்மி' முதல்வரா இருக்கீங்களே.! விஜய்யை போட்டுத்தாக்கும் திமுக
Embed widget