மேலும் அறிய

Mayiladuthurai: புகழ்பெற்ற மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்..19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழா!

மயிலாடுதுறையில் குருபரிகார தலமாக விளங்கும் வதான்யேஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா 19 ஆண்டுகளுக்கு பிறகு தருமபுரம் மடாதிபதி முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரியின் வடகரையில்  உத்தரமாயூரம் என்றழைக்கப்படும் கைகாட்டும் வள்ளலாக ஞானத்தை அள்ளித்தரும் பெருமானாக பழமையும், புகழும் வாய்ந்த ஶ்ரீ ஞானாம்பிகை உடனாகிய வதான்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் ரிஷப தேவரின் கர்வத்தை  அடக்கி தட்சிணாமூர்த்தியாக சிவபெருமான் காட்சி தந்த பெருமைக்குரிய தலம்.  

Mayiladuthurai: புகழ்பெற்ற மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்..19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழா!

மேலும் வேறெங்கும் இல்லாதவாறு இங்கு நந்தியின் மேல் ஸ்ரீமேதா தக்ஷிணாமூர்த்தி எழுந்தருளி காட்சி அளிக்கிறார்.  ஐந்து நிலை ராஜகோபுரங்கள் கொண்ட இக்கோயில் 19 ஆண்டுகளுக்குப்பிறகு புனரமைக்கப்பட்டு  இன்று மகா கும்பாபிஷேகப் பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  பூர்வாங்க பூஜைகள் கடந்த செப்டம்பர் 3 -ம் தேதி தொடங்கி 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தருமபுர ஆதீனம் 24 -வது குருமகா சன்னிதானம்  ஶ்ரீலஶ்ரீ கையிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த  பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற 8 -ம் கால யாகசாலை பூஜையில் ஹோமங்கள், மகா பூரணாகுதி மகாதீபாரதனை செய்யப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தது. 

SBI Apprentice Recruitment: 6,160 பணியிடங்கள்; எஸ்.பி.ஐ. வங்கியில் தொழில்பழகுநர் வாய்ப்பு - முழு விவரம்

Mayiladuthurai: புகழ்பெற்ற மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்..19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழா!

தொடர்ந்து மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க புனித நீர் அடங்கிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு ஆலயத்தை வலம் வந்து விமான கோபுரத்தை அடைந்தது. சுவாமி கருவறை தங்க கலசம், அம்பாள் ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுர கலசங்களுக்கும், மேதா தட்சிணாமூர்த்தி தங்க கலசம் ஆகியவற்றிற்கு ஒரே நேரத்தில் வேதியர்கள் மந்திரங்கள் முழங்க  புனிதநீர் ஊற்றி மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. 

CM MK Stalin: இறைநம்பிக்கையாளர் அனைவரும் போற்றும் ஆட்சியாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..

Mayiladuthurai: புகழ்பெற்ற மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோயில்..19 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் விழா!

கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீன மடாதிபதி, சூரியனார் கோயில் ஆதீன மடாதிபதி, துழாவூர் ஆதீன மடாதிபதி, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.மீனா மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Vinayagar Chaturthi 2023: விநாயகர் சிலையை இங்குதான் கரைக்க வேண்டும்.. மாவட்ட நிர்வாகம் சொன்ன முக்கிய தகவல்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!

கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!

ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?

"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்

Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்

Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Embed widget